ராஜ்கிரண்!

சினிமா துறையில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ராஜ்கிரண்.

இவரது இயற்பெயர் காதர். ஆனால் ராஜ்கிரன் என்ற பெயரில் மூலமே மக்களிடத்தில் மிகவும் பிரபலமானவர். இதுவரை சினிமாவில் 30 திரைப்படங்களை நடித்திருக்கும் இவர் ஒரு சில திரைப் படத்தை தயாரித்தும் இயக்கியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா துறைக்கு நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்

அந்த வகையில் வைகைப்புயல் வடிவேலுவை சினிமாவில் அறிமுகப் படுத்தியதே நடிகர் ராஜ்கிரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களில் நடித்த இவர் கடைசியாக நடிகர் விஷாலுடன் இணைந்து சண்டகோழி2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இயல்பாகவே மிகவும் அமைதியான மனிதரான ராஜ்கிரண் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் பிரச்சனைகளை சந்தித்துள்ளார். முதலில் நடிகர் ராஜ்கிரன் செல்லம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட காலத்திலேயே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர்

சட்டப்படி விவாகரத்து பெற்ற ராஜ்கிரன் இரண்டாவதாக பத்மஜோதி என்னும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது ராஜ்கிரன் பத்மஜோதி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிம்மதி இல்லாமல் தவித்த ராஜ்கிரணுக்கு இரண்டாவது திருமணத்திற்கு பின்பு மகிழ்ச்சியான வாழ்வு அமைந்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
