டிக்-டாக்

‘சிங்கப் பெண்னே’ பாடலுக்கு 3 பெண்கள் பரதம் ஆடும் டிக்-டாக் காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதில், பெண்களின் பெருமையை போற்றும் விதமாக “சிங்கப் பெண்ணே“ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. பெண்கள் மத்தியில் இந்த பாடல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் டிக்-டாக் செயலியில் சிங்கப் பெண்ணே பாடலுக்கு பெண்கள் பலர் நடனமாடி அதனை பதிவேற்றி உள்ளனர். அவற்றுள் பரதம் மூலமாக நடனமாடிய 3 பெண்களின் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது வருகிறது.
