நடுரோட்டில் மனைவி செய்த செயல்; ஆத்திரத்தில் கணவன் செய்த கொ டூரம்!

பெண் தோழியுடன் சேர்ந்து, நடுரோட்டில் நின்று டிக்-டாக் செய்த மனைவியை கணவன் கொ லை செய்த பரபரபப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் ஆந்திரப்பிரதேசம் திருப்பதி அருகே இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

திருப்பதி அருகே உள்ள தாலூறு கிராமத்தை சேர்ந்தவர் சேக் பாஷா. இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மனைவி பாத்திமா டிக்-டாக்கில் கணக்கை துவங்கி, நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்த விஷயம் அவரது கணவருக்கு தெரியவரவே, அவர் மனைவியை கண்டித்துள்ளார்.

இருப்பினும், லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற மோகத்திற்காக, கணவருக்கு தெரியாமல் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார் பாத்திமா.

இவ்வாறு சென்றுக்கொண்டிருந்த நிலையில், ஒரு நாள் பாத்திமா தனது பெண் தோழியுடன் சேர்ந்து, நடுரோட்டில் நின்று டிக்-டாக் செய்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த சேக் பாஷா, தனது மனைவியை கொ லை செய்தார்.

இந்த விஷயம், வெளியில் தெரிந்தால் குடும்ப கவுரவம் பாழாகி விடும் என்று எண்ணிய அவர், தனது மனைவி தற்கொ லை செய்துக்கொண்டுள்ளார் என்று நாடகமாடியுள்ளார். இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சேக் பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.