பசியுடன் கையில் தட்டை வைத்து நின்ற சிறுமியின் தற்போதைய நிலை… யார் அவர்? தெரியவந்த காரணம்!

image_pdfimage_print

இந்தியாவில் பசியுடன் கையில் தட்டு வைத்த படி, வக்குப்பறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுமி தற்போது அதே பள்ளியில் சேர்ந்துள்ளார்.

ஹைதரபாத்தின் Gudimalkapur-ல் இருக்கும் Deval Jham Singh அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இருக்கும் வகுப்பறைக்கு வெளியே பசியால் இருக்கும் சிறுமி ஒருவர் உள்ளே ஆசிரிய சொல்லித் தரும் பாடத்தை கவனிப்பது போன்ற புகைப்படம் பிரபல ஊடகம் ஒன்றில் செய்தியாக வெளியிடப்பட்டது.

அதில் அந்த சிறுமி தினமும் அந்த பள்ளிக்கு வருவார் எனவும் சாப்பாட்டின் போது, மிச்சம் இருக்கும் உணவை அவர் பெற்று செல்வார் என்று கூறப்பட்டது.

இதையடுத்து அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அந்த சிறுமியின் பெயர் திவ்யா எனவும், அவர் ஒரு குப்பை சேகரிப்பாளரின் மகள், அருகில் இருக்கும் சேரியில் தான் வசித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது அந்த சிறுமி அதே பள்ளியில், மாணவியாக சேர்ந்துள்ளார். இதனால் அவரின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இதற்கு யார் காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.