பணிப்பெண்ணின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட புகைப்படம் : இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டு!!

இந்தியாவில் வேலை இல்லாமல் சி ரமப்பட்டு வந்த பெண்ணை, ஒரு பேஸ்புக் பதிவு மூலம் அவர் வாழ்க்கையையே மாற்றிய இளம் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

புனேவைச் சேர்ந்தவர் கீதா காலே. இவர் வீட்டு வேலை செய்வது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, சமையல் செய்வது போன்ற பணிகளை செய்து வந்தார்.

இதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் தான் கீதா குடும்பத்தை நடத்தி வந்தார். ஆனால் திடீரென்று ஒருநாள் இவருக்கு வேலை இல்லாமல் போக, மிகவும் சி ரமப்பட்டுள்ளார்.

அப்போது இவரின் நிலையை அறியை தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனுஸ்ரீ என்ற பெண் அவருக்கு வேலை கொடுத்துள்ளார்.

அதோடு மட்டுமின்றி, கீதாவிற்காக விசிட்டிங் கார்டு ஒன்றை தயாரித்த அவர், அதில் அவர் பெயர் தொடர்பு எண். வீட்டு வேலைகளுக்கு எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு பணம் போன்றவைகளை குறிப்பிட்டிருந்தார்.

இதை அவரது அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி மூலம் ஒவ்வொரு வீட்டிற்காய் விநியோகம் செய்ய வைத்துள்ளார்.

அதன் பின், கீதாவுடன் தனுஸ்ரீ செல்பி எடுத்து அவர் அடித்த விசிட்டிங் கார்டையும் சேர்ந்து பேஸ்புக்கில் பதிவிட, இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

பலர் இதை பார்த்து கீதாவிற்கு போன் செய்து வருகின்றனர். இதனால் கீதா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தற்போது இருக்கும் காலத்தில் பலரும் சமூகவலைத்தளங்களை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தி வரும் நிலையில், தனுஸ்ரீயின் இந்த செயல் பலர்து பாராட்டுக்களை பெற்று வருகிறது.