சஜித்திற்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! என்ன நடந்தது தெரியுமா??

சஜித் பிரேமதாச

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியைக் குறிக்கும் விதமாக கண்டி மஹியாவை வெவெல்தெனிய மைதானத்தில் இறுதிப் பேரணி நேற்று நடைபெற்றது.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி அமைப்பாளர்கள் UNPயை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டதுடன், பெருந்திரளான மக்கள் இந்த பேரணிக்கு வருகை தந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பிற மாவட்டங்களில் இருந்து மக்களை அழைத்து வரப்படாத நிலையில், கண்டி மாவட்ட மக்களால் மட்டும் பேரணி நடைபெற்ற மைதானம் நிரம்பி வழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமைக்கு மாறாக அதிகளவான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர் பாராத இந்த சம்பவத்தால் சஜித்திற்கு பெரு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.