மாணவி த ற்கொ லை வழக்கில் அதிரடி திருப்பம் : கைபேசியில் இருந்த முக்கிய பெயர்கள்!!

மாணவி த ற்கொ லை

சென்னையில் ஐஐடி மாணவி த ற்கொ லை செய்துகொண்ட வழக்கில் அ திரடி திருப்பமாக, அவருடைய செல்போனில் பேராசிரியர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த ஃபாத்திமா லத்தீஃப் என்கிற மாணவி கடந்த ஆண்டு மத்திய அரசால் நடத்தப்பட்ட தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்தார்.

முதலாமாண்டு படித்து வந்த ஃபாத்திமா நவம்பர் 9-ம் திகதியன்று விடுதியில் உள்ள அறையில் தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டார். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,

கடந்த மாதம் நடைபெற்ற இன்டெர்னல் தேர்வில் அவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாலே த ற்கொ லை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

ஆனால் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்த ஃபாத்திமாவின் பெற்றோர் மற்றும் அவருடைய இரட்டை சகோதரி ஆயிஷா லத்தீப், கோட்டூர்புரம் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

மேலும், ஃபாத்திமாவின் செல்போனை ஆராய்ந்த போது, த ற்கொ லைக்கு காரணம் பேசிரியர் சுதர்சன் பத்மநாபன் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல மிலிந்த் பிராமே, ஹேமசந்திரன் காரா ஆகிய பேராசியர்கள் தன்னை து ன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவமானது கேரளா மட்டுமில்லாது தமிழகத்திலும் பலத்த அ திர்வலைகளை கிளப்பியுள்ளது. சம்பவம் தொடர்பாக ஃபாத்திமாவின் பெற்றோர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.