6 வயது சி றுவனுக்கு எ மனான கொதிக்கும் சாம்பார் அண்டா : அலட்சியத்தால் ப றிபோன உ யிர்!!

6 வயது சி றுவனுக்கு..

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தனியார் பாடசாலை ஒன்றில் சாம்பார் அண்டாவுக்குள் த வறி வி ழுந்து 6 வயது சி றுவன் ம ரணமடைந்த சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பான்யம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பாடசாலையிலேயே குறித்த 6 வயது சி றுவனுக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

புதனன்று மதிய உணவு வேளையில், 6 வயதான புருசோத்தம் ரெட்டி கொதிக்கும் சாம்பார் அண்டாவில் த வறி வி ழுந்துள்ளார். உடனடியாக பாடசாலை நிர்வாகிகள், சிறுவனை மீட்டு அடுத்துள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ப்பித்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மாவட்ட மருத்துவமனையில் வைத்து சிறுவன் சி கிச்சை ப லனின்றி ம ரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

உணவுக்காக வரிசையில் நின்ற சிறார்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், சிறுவன் புசோத்தம் ரெட்டி முன்னால் இருந்த கொதிக்கும் சாம்பார் அண்டாவுக்குள் சென்று விழுந்துள்ளான்.

இச்சம்பவத்தை கண்டித்து சிறுவனின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் பாடசாலையை மு ற்றுகையிட்டு ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலை நிர்வாகத்தின் அ லட்சியம் மற்றும் க ண்காணிப்பு இல்லாததால் அவரது மகன் இ றந்துவிட்டதாக ஷியாம்சுந்தர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பான்யம் பொலிசார் வ ழக்குப் பதிந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.