கார்த்திகை மாத ராசிபலன் 2019 : எந்த ராசிக்காரர்களை ராஜயோகம் தேடி வர போகுது தெரியுமா?

கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார்.

துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக இழந்து நீசம் என்ற நிலையில் சஞ்சரித்து வந்த சூரியன், தான் முழுமையாக வலிமை பெற தனது பயணத்தைத் துவக்கும் காலமே கார்த்திகை மாதமாக கருதப்படுகின்றது.

அதுமட்டுமின்றி காரத்திகை மாதத்தில் தான் முருகன் அவதரித்து இருப்பதனால் இம்மாதம் சிறப்புடைய மாதமாக கருதப்படுகின்றது.

அந்தவகையில் இந்த காரத்திகை மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அதிர்ஷ்டம் தரபோகுது என்று பார்ப்போம்.

மேஷம்
இந்த மாதத்திய கிரக நிலையினால் சற்று சிரமத்தினை எதிர்கொண்டாலும், குரு பகவானின் சிறப்புப் பார்வை உங்கள் நிலையில் சற்று முன்னேற்றத்தினை காணச் செய்யும். ராசிநாதன் செவ்வாயின் அமர்வு நிலையும் சாதகமாக அமைந்துள்ளது.

எட்டாம் வீடு வலுப்பெற்று காரிய அலைச்சலைத் தந்தாலும், போராடி வெற்றி காணும் திறனைத் தரும்.

எடுத்த காரியத்தினை வெற்றிகரமாகச் செயல்படுத்த பல்வேறு விதமான தடைகளைச் சந்திக்க நேர்ந்தாலும், மனம் தளராது கடமையைச் செய்து வருவதால் காரிய வெற்றி சாத்தியமாகும். விரக்தியான எண்ணங்களை மனதை விட்டு விரட்டுங்கள்.

தனாதிபதி சுக்கிரனின் நிலை கடன் சுமையுடன் ஆடம்பர செலவுகளையும் உண்டாக்கும். குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும்.

பேசும் வார்த்தைகளில் அறிவுரை நிறைந்த கருத்துக்கள் அதிகமாக வெளிப்படும். முன்பின் தெரியாத நபர்களால் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு என்பதால் புதிய மனிதர்களிடம் எச்சரிக்கை தேவை.

இந்த மாதத்தில் அநாவசியமான பிரயாணங்களை அவசியம் தவிர்க்க வேண்டும். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். மாணவர்கள் அயராது உழைக்க வேண்டியது அவசியம்.

பிள்ளைகளால் சற்று கூடுதல் செலவுகளை சந்திக்க நேர்ந்தாலும் அவர்களின் செயல்வேகத்தினைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினை நிறைவேற்றுவதில் தடை உண்டாகலாம். மாதத்தின் இறுதியில் ஆன்மிகப் பணிகளுக்காக அதிகம் செலவழிக்க நேரிடலாம்.

தத்துவ சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும். உத்யோக முறையில் அதிக அலைச்சலைக் காண நேரிடும். அவ்வப்போது மனசஞ்சலம் தோன்றி மறையும்.

பெற்றோரின் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. கலைத்துறையினர் போராடி வெற்றி காண வேண்டிய சூழலுக்கு ஆளாவார்கள். சுயதொழில் செய்வோர் திருப்புமுனையைக் காண்பார்கள். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 26, 27.

பரிகாரம்: தினந்தோறும் கந்த சஷ்டி கவசம் படித்து வாருங்கள்.

ரிஷபம்
நவம்பர் மாதம் 22ம் தேதி முதல் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சார நிலை சற்று சிரமத்தினைத் தரக்கூடும்.

ஏழாம் இடத்தின் வலிமை தொடர்ந்து கொண்டிருந்தாலும், தடையினை உண்டாக்கும் எட்டாம் இடத்தில் ராசிநாதனின் அமர்வு நிலை அமைந்திருப்பதால் நினைத்த காரியத்தில் வெற்றி காண்பதில் பலவிதமான இடைஞ்சல்களை சந்திக்க நேரிடும்.

நீங்கள் செய்ய நினைக்கும் காரியத்தினில் நேரடியாக ஈடுபடாமல் அடுத்தவர்களின் துணையோடு பின்னால் இருந்து செயல்பட வேண்டியிருக்கும். தனாதிபதியின் சாதகமான சஞ்சார நிலை டிசம்பர் 3ம் தேதி முதல் நல்ல பண வரவினைத் தரும்.

வரிசையில் காத்திருக்கும் செலவுகளை சமாளிக்கும் வகையில் வரவு நிலை தொடரும். குடும்பத்தில் சலசலப்புகளுக்கிடையே கலகலப்பும் இருந்து வரும். பேச்சினில் வெளிப்படும் விவேக சிந்தனைகள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும்.

மனதளவில் அவ்வப்போது சஞ்சலத்தைக் காண்பீர்கள். உடன்பிறந்தோருக்கு முக்கியமான நேரத்தில் உதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதினில் சற்று சிரமத்தினையும், இரவினில் சாதகமான பலன்களைத் தரும் வகையிலும் அமையும்.

பிரயாணத்தின்போது உண்டாகும் புதிய நட்புறவுகள் நெடுநாளைக்குத் தொடரும் வாய்ப்பு உண்டு. எனினும் இந்த மாதத்தில் அநாவசிய பிரயாணத்தைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை கூட்டுப்பயிற்சியின் மூலம் உயர்வடையும். பிள்ளைகளின் விவேகமான செயல்களைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.

வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினை நிறைவேற்றித் தருவதற்கான வாய்ப்பு நவம்பர் மாதத்தின் இறுதியில் உருவாகும். நண்பர்களால் ஒரு சில சங்கடங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

கலைத்துறையினர் போட்டி என்று வரும்போது இறுதிச்சுற்றில் வெற்றி வாய்ப்பினை இழக்க நேரலாம். தொழில்முறையில் போராட்டத்தின் பேரில் வெற்றி கிட்டி வரும். கூட்டுத்தொழில் பிற்பாதியில் லாபத்தினைத் தரும்.

மருத்துவ செலவுகள் தோன்றும் வாய்ப்பு உண்டென்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 28, 29

பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டு வாருங்கள்.

மிதுனம்
அநாவசியமான பிரச்னைகளைத் தோற்றுவிக்கும் ஆறாம் இடத்தில் வலிமை கூடுவதால் இந்த மாதத்தில் சற்று சிரமத்தினை சந்திக்க நேரிடும்.

டிசம்பர் 3ம் தேதி முதல் ராசிநாதன் புத பகவானின் ஆறாம் இடத்து அமர்வு நிலை எந்த ஒரு செயலிலும் போராடி வெற்றி பெற வேண்டிய சூழலை உருவாக்கும்.

வீண் வம்பு, வழக்குகள் தோன்றும் வாய்ப்பு உள்ளதால் அடுத்தவர்கள் விவகாரத்தில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது.

கொடுக்கல், வாங்கலில் அடுத்தவர்களுக்காக முன்நின்று செயல்படுவதைத் தவிர்ப்பது அவசியம். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். கடன் பிரச்னைகளை எப்பாடுபட்டாவது முடிவிற்குக் கொண்டுவர முயற்சிப்பீர்கள்.

இதனால் மாதாந்திர குடும்ப செலவுகளைச் செய்வதில் சிறிது சிரமத்தினைக் காண்பீர்கள். அடகு வைக்கப்பட்டிருக்கும் நகை, சொத்து முதலானவற்றை மீட்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகலாம். மூத்த சகோதரத்தின் வழியில் ஆதாயம் உண்டாகும்.

தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய் இருந்து வரும். நண்பர்களின் வழியில் ஆதாயம் காணும் நீங்கள் மாதத்தின் பிற்பாதில் அவர்களால் ஒரு சில சங்கடத்திற்கும் ஆளாவீர்கள்.

வண்டி, வாகனங்களை இயக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆறாம் இடத்தின் வலிமையால் உடல்நிலையில் சிரமத்தினைக் காண நேரிடலாம்.

சாதாரண காய்ச்சல் போன்றவற்றையும் அலட்சியப்படுத்தாது உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.

அவரது உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். கலைத்துறையினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறக் காண்பார்கள். பூர்வீக சொத்து விவகாரங்கள் முடிவிற்கு வரும்.

தொழில்முறையில் அலைச்சல் அதிகரிக்கும். ஆன்மிக சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். விடாமுயற்சியின் மூலம் வெற்றி காண வேண்டிய மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 30, டிசம்பர் 1, 2.

பரிகாரம்: தன்வந்திரி பகவானை வழிபட்டு வர ஆரோக்யம் மேம்படும்.

கடகம்
இந்த மாதத்திய கிரஹ நிலை வாழ்வியல் நிலையில் பலதரப்பட்ட மாற்றங்களைத் தரும். சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் இடத்தின் வலிமையால் மனதில் பல்வேறு விதமான சிந்தனைகளுக்கு இடமளித்து வருவீர்கள்.

ஒரே நேரத்தில் பல கேள்விகள் எழுந்தாலும் ஒன்றோடொன்று குழப்பிக் கொள்ளாமல் எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலைத் தேர்ந்தெடுத்துச் சொல்வதில் வல்லவராக திகழ்வீர்கள்.

அடுத்தவர்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் அற்புதமான நன்மையை ஏற்படுத்தித் தரும்.

பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் கறார்தன்மை உங்களின் நேர்மையையும், ஒழுக்கத்தையும் பறைசாற்றும். குடும்பத்தில் சலசலப்பபும் கலகலப்பும் இணைந்திருக்கும்.

தனாதிபதியின் சாதகமான அமர்வு நிலை பல்வேறு வழிகளில் பொருள்வரவினைப் பெற்றுத் தரும். எனினும் ஆறாம் பாவகத்தின் வலிமையால் கடன் பிரச்னைகள் தலையெடுக்கலாம்.

இந்த மாதத்தில் கண்டிப்பாக கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்க வேண்டும். உடன்பிறந்தோருடன் இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைவதைக் கண்டு வருத்தம் உண்டாகும். சதா டென்ஷனாக இருப்பதால் உடல்நிலையில் சிரமம் காண்பீர்கள்.

வீண் வம்பு வழக்குகள் வந்து சேர்வதற்கான வாய்ப்பு உள்ளதால் அடுத்தவர்கள் பணிகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் போன்ற இனங்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பான முன்னேற்றத்தினைக் காணும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு.

அதே நேரத்தில் ஏற்கெனவே இருந்து வரும் அசையாச் சொத்துக்களில் புதிய பிரச்னைகளை சந்திக்க நேரலாம். கலைத்துறையினர் எதிர்பார்த்திருந்த புகழும் பாராட்டும் வந்து சேரும்.

தொழில்முறையில் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் நேரம் இது. கூட்டுத்தொழில் செய்வோர் கணக்கு வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தன்முயற்சியால் வெற்றியைக் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள் : டிசம்பர் 3, 4.

பரிகாரம்: பௌர்ணமி நாளில் அன்னதானம் செய்யுங்கள்.

சிம்மம்
இந்த மாதத்தில் நிலவும் ராசிநாதன் சூரியனின் சுக ஸ்தான அமர்வு நிலை வாழ்வியல் தரத்தினை உயர்த்தும் வகையில் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் இதுநாள் வரை கண்டு வந்த அலைச்சல் குறைந்து எளிதான வெற்றியைக் காண்பீர்கள். செயல்வேகத்தின் அதிகரிப்பால் தொடர்வெற்றி கண்டு வருவீர்கள்.

ஒவ்வொரு விஷயத்திலும் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதால் தோல்வி என்ற வார்த்தைக்கு இடமிருக்காது. ஆயினும் நீங்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ள நபர் ஒருவர் உங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக நடக்கலாம்.

குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் கலந்திருக்கும். கவனக்குறைவாக நீங்கள் பேசும் வார்த்தைகள் சங்கடத்தினைத் தரலாம்.

குரு,சனி,கேதுவின் இணைவு சிந்தனையில் தேவையற்ற குழப்பத்தினைத் தரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பழுதாகி சிரமத்தினைத் தரும். இந்த மாதத்தில் அவ்வப்போது சிறிதுதூர பிரயாணங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருந்து வரும். புதிய சொத்துக்கள் வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற முயற்சியில் உள்ளோருக்கு வங்கி சார்ந்த உதவிகள் கிட்டும். வண்டி, வாகனத்தை புதிதாக மாற்றிக்கொள்ள எண்ணுவோருக்கு நேரம் சாதகமாக அமையும்.

பிள்ளைகளின் வாழ்க்கை முறையை உயர்த்த முயற்சிப்பீர்கள். நெருங்கிய நண்பர் ஒருவருக்கு கடன் பிரச்னையில் உதவி செய்ய வேண்டியிருக்கும். தம்பதியராக இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள்.

தொழில்முறையில் புதிய யுக்திகளைப் புகுத்தி அதற்குரிய பலனை அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருப்பீர்கள்.

கலைஞர்கள் சிறப்பான கௌரவத்தைப் பெறுவர். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பொறுப்பு உயரக் காண்பர்.

கனவுத் தொல்லைகளால் நிம்மதியான உறக்கம் கெடலாம். டிசம்பர் மாதத்தின் முற்பாதியில் பொதுப்பணிகளில் முன்நின்று செயல்படுவதால் வீண்வம்பு, வழக்குகளை சந்திக்க நேரிடும். நற்பலன்களை எதிர்கொள்ளும் வாரம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 5, 6, 7.

பரிகாரம்: ரங்கநாதப் பெருமாளை புதன்கிழமை தோறும் வணங்கி வாருங்கள்.

கன்னி
தைரிய ஸ்தானம் வலுப்பெறுவதால் இந்த கார்த்திகை மாதத்தில் அசாத்தியமான துணிச்சலுடன் செயல்பட்டு வருவீர்கள். அதே நேரத்தில் தொழில்முறை விவகாரங்களில் ஒரு சில தடைகளை சந்திக்க நேரலாம்.

டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை நினைத்த காரியங்களில் எளிய வெற்றியையும், அதனைத் தொடர்ந்து சற்று இழுபறியான நிலையையும் சந்திக்க நேரிடும்.

மனதில் அவ்வப்போது தோன்றி மறையும் சோம்பல்தன்மையினால் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். பேசும் வார்த்தைகளில் முற்றிலும் புதிய கருத்துக்களைச் சொல்லி அடுத்தவர்களை சிந்தனைக்கு உள்ளாக்குவீர்கள்.

குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் இணைந்திருக்கும். பொருளாதார முன்னேற்றத்தினைக் குறிக்கோளாகக் கொண்டு முழு முயற்சியுடன் செயல்பட்டு வருவீர்கள்.

அதீதமான சிக்கன நடவடிக்கைகளின் மூலம் அநாவசிய அவப்பெயர் உண்டாகலாம். அடுத்தவர்களின் கேலியான பேச்சினை காதில் வாங்கிக்கொள்ளாமல் உங்கள் கொள்கைகளில் உறுதியாய் இருந்து வருவீர்கள்.

குறைந்த தரமுள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி பொருளிழப்பினை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சங்களில் உதவியாக அமையும்.

உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்பட்டு நெடுநாளாக நிலுவையில் இருந்து வரும் குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பீர்கள். மாணவர்கள் அடிக்கடி ஞாபகமறதித் தொந்தரவிற்கு ஆளாகும் வாய்ப்பு உண்டென்பதால் எழுத்துப் பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது.

உடல்நிலையில் அவ்வப்போது கண்டு வரும் அசதியினைப் போக்க உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது.

குடியிருக்கும் வீட்டினை அலங்கரிப்பதில் ஈடுபாடு உருவாகும். வாழ்க்கைத்துணையின் கருத்துக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவீர்கள். தொழில்முறையில் புதிய செயல்திட்டங்களை வகுக்கும் நேரமாக இருக்கும்.

கலைத்துறையினர் தங்கள் பேச்சுத்திறமையால் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உத்யோகஸ்தர்கள் சகபணியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 8, 9.

பரிகாரம்: அரசமரத்தடி நாகரை வியாழன்தோறும் வணங்கி வாருங்கள்.

துலாம்
ராசிநாதன் சுக்கிரனின் சாதகமான அமர்வு நிலையினால் நவம்பர் 22ம் தேதி வரை நினைத்த காரியங்கள் சாதகமாக முடியும். அதன் பின்பு அதிக அலைச்சலைக் கண்டு வருவீர்கள். செயல்வேகம் அதிகரிக்கும் அதே நேரத்தில் வீண் பிரச்னைகளும் தோன்றும்.

வேகத்தை விட விவேகமே சிறந்தது என்பதைப் புரிந்துகொண்டால் வெற்றி நிச்சயம். சிக்கலான நேரத்திலும் திறமையான பேச்சுக்களின் மூலம் வெற்றி காண இயலும்.

விவேகமான பேச்சுக்கள் பல விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமையும். உலக விஷயங்களை அனுபவ பூர்வமாக உணர்ந்திருப்பதால் பலர் உங்களை உதவி கேட்டு நாடி வரக்கூடும்.

உங்களின் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையும். இரண்டாம் இடமாகிய தன ஸ்தானம் வலிமை பெறுவதால் பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவீர்கள். சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உண்டு.

குடும்பத்தில் சலசலப்புகளுக்கிடையே கலகலப்பான சூழ்நிலை இருந்து வரும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் பயனுள்ள வகையில் அமையும். குடும்பத்தினரோடு நவம்பர் மாதத்தின் இறுதியில் ஆன்மிகப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு.

தொலைதூரப் பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மாணவர்கள் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக புதிய செயல்திட்டத்தில் இறங்குவீர்கள்.

கடன்பிரச்னைகள் கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாகத் துணை நிற்பார். தான, தர்ம காரியங்களுக்காக அதிகம் செலவழிக்க நேரிடும்.

தொழில்முறையில் சாமர்த்தியமிக்க செயல்பாடுகளால் ஆதாயம் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு டிசம்பர் மாதத்தின் துவக்கம் புதிய திருப்புமுனையைத் தரும். நற்பலன்களை அனுபவிக்கும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள் : டிசம்பர் 10, 11.

பரிகாரம்: ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

விருச்சிகம்
ராசியில் இணைவினைப் பெறும் வலுவான கிரகங்களின் நிலையும், தனாதிபதி குருவின் சாதகமான சஞ்சாரமும் உங்களின் செயல்களில் சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தரும். இந்த மாதத்தில் ராசிநாதன் செவ்வாயின் சாதகமற்ற சஞ்சாரம் உங்களுக்கு அதிக அலைச்சலை தந்தாலும் மனஉறுதியை அதிகரிக்கச் செய்யும்.

போட்டியாளர்களுக்குச் சிறிதும் வாய்ப்பளிக்காது உங்களின் வெற்றியை உடனுக்குடன் உறுதி செய்து வருவீர்கள். எதைப்பற்றியும் கவலைப்படாது தைரியத்துடன் செயல்படுவதால் வெற்றி என்பது உறுதியாகி வருகிறது.

அடுத்தவர்களின் விமர்சனங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மனதில் தோன்றுவதை உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறீர்கள். எனினும் ஆழம் தெரியாமல் காலைவிடுவது நல்லதல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

பொருளாதார நிலையில் முன்னேற்றம் கண்டு வரும் அதே நேரத்தில் பண விவகாரத்தில் முன்பின் தெரியாத புதிய நபர்களால் ஏமாற்றப்படும் சூழலுக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் அமைதியான சூழலுக்கு பங்கம் உண்டாகலாம்.

பணிச்சுமை அதிகரிக்கும் நேரம் என்பதால் குடும்பப் பொறுப்புகளை கவனிக்க இயலாது போகக்கூடும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.

தகவல் தொடர்பு சாதனங்கள் தக்க சமயத்தில் செயலிழந்து சிரமத்தினைத் தரும். நவம்பர் மாதத்தின் இறுதியில் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. இதுநாள் வரை விரோதம் பாராட்டி வந்த உறவுமுறை ஒன்று உங்களின் நட்புறவை நாடி வரக்கூடும்.

பிள்ளைகளின் ஆலோசனைகள் குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். வாழ்க்கைத்துணையோடு கலந்து ஆலோசிக்கும் நேரம் குறையலாம். பொழுதுபோக்கு அம்சங்களான கேளிக்கை, கொண்டாட்டங்களில் பங்குபெற இயலாமல் போகும். சுயதொழில் செய்வோர் பேச்சுத்திறமையின் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

கலைத்துறையினருக்கு அதிக அலைச்சல் உண்டானாலும் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உத்யோகஸ்தர்கள் கடமை தவறாத செயல்பாட்டின் மூலம் பதவி உயர்விற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். நற்பலன்களைக் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 12, 13, 14.

பரிகாரம்: பைரவர் வழிபாடு உங்கள் வெற்றிக்குத் துணைபுரியும்.

தனுசு
இந்த மாதத்தில் அநாவசிய அலைச்சலைத் தரும் 12ம் இடத்தின் வலிமை சாதகமான பலன்களைத் தராது போனாலும், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களின் துணை உங்களைக் காக்கிறது. முக்கியமாக நவம்பர் 22ம் தேதியன்று நிகழும் சுக்கிரனின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான நற்பலன்களைத் தருகிறது.

நிலுவையில் உள்ள தொகைகள் வசூலாகும். கடன் சுமை குறையும். கார்த்திகை மாதத்தின் துவக்கத்தில் சற்று சிரமத்தினைக் கண்டாலும் நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் சாதகமான நிகழ்வுகள் நடைபெறக் காண்பீர்கள்.

வார்த்தைகளில் வலிமை நிறைந்த கருத்துக்கள் இடம்பெறும். குடும்பத்தில் அமைதி நிலவும். சிறப்பான பொருள் வரவு உண்டாகும்.

அதே நேரத்தில் ஆடம்பர செலவுகளும் அதிகரிக்கும். நெடுநாட்களாக நிலுவையில் இருந்து வரும் வங்கி சாராத வெளிவட்டார கடன்பிரச்னைகள் கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வரும்.

புதிய மனிதர்களுடனான தொடர்பு எதிர்கால வளர்ச்சிக்கு துணைபுரியும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை. புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோர் ஒரு சில தடைகளை சந்திக்க நேரிடும்.

உறவினர்களோடு மனஸ்தாபம் கொள்ளும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கவனச் சிதறலைத் தவிர்த்து ஈடுபாட்டோடு படிக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் செயல்களில் வேகத்தோடு விவேகத்தினையும் காண்பீர்கள்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தத்தினையும் அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நலம் தரும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் முடிவிற்கு வரும். பூர்வீக சொத்துக்களில் புதிய பிரச்னைகள் தோன்றும்.

கலைத்துறையினர் இதுநாள் வரை கண்ட சிரமத்திற்கு பரிசாக சிறப்பான தன லாபத்தினைக் காண்பர். தொழில்முறையில் இந்த மாதத்தில் அதிக அலைச்சலுக்கு ஆளாவீர்கள். சுயதொழில் செய்வோர் கார்த்திகை மாதத்தின் இறுதி வாரத்தில் புதியதொரு திருப்புமுனையை சந்திப்பார்கள். சரிசம பலனைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 17, 18, டிசம்பர் 15, 16.

பரிகாரம்: கார்த்திகை தீபத்திருநாள் அன்று அன்னதானம் செய்யவும்.

மகரம்
இந்த மாதத்தில் ராசிநாதன் சனியோடு குரு இணைந்திருப்பதால் ஓரளவிற்கு நிம்மதி காண்பீர்கள். எந்த ஒரு செயலையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செயல்பட்டுவர வேண்டியது அவசியம். எடுத்த காரியத்தை செய்து முடிக்கும்வரை ஓய்வில்லாமல் பணியாற்ற வேண்டும்.

பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்து வாருங்கள். பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் ஆதங்கம் உங்கள் மதிப்பினைக் குறைக்கும். அநாவசிய பேச்சுக்களைத் தவிர்த்து ஆதாயம் தரும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்த முயற்சியுங்கள்.

குடும்பத்தில் அமைதி நிலவி வரும். நவம்பர் மாதத்தின் இறுதியில் லாப ஸ்தானத்தின் வலிமை சிறப்பான பொருள் வரவினைத் தரும். அதே நேரத்தில் செலவினங்களும் வரிசையில் காத்து நிற்கும்.

குடும்பத்தினரின் நெடுநாளைய விருப்பங்களை நிறைவேற்றுவதிலும், தொலைதூரப் பிரயாணங்களிலும் அதிக செலவுகள் உண்டாகக் காண்பீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும்.

தகவல் தொடர்பு சாதனங்கள் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களாகப் பயன்படும். உறவினர்களால் உண்டான கலகங்களை முடிவிற்குக் கொண்டு வருவதில் வெற்றி கிட்டும். மாணவர்கள் வினாக்களைப் புரிந்துகொண்டு விடையளிக்கும் கலையை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

சமுதாயத்தால் விரும்பத்தகாத மனிதர்களின் சேர்க்கை ஆபத்தினைத் தரும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருந்து வாருங்கள்.

துஷ்டரைக் கண்டால் தூர விலகுவது நல்லது. அடுத்தவர்களின் பிரச்னையை உங்கள் தலையில் சுமக்காதீர்கள். ரத்தப்போக்கு, வயிற்றுவலி சார்ந்த உபாதைகளால் உடல்நிலையில் சிரமம் உண்டாகலாம். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய்த் துணைநிற்பார்.

உத்யோகஸ்தர்கள் ஓய்வில்லாமல் செயல்பட்டு நற்பெயரை தக்கவைத்துக் கொள்வார்கள். சுயதொழில் செய்வோர் அதிக அலைச்சலைக் கண்டு வருவார்கள். கலைத்துறையினர் ஓய்வின்றி செயல்படும் வகையில் வாய்ப்புகள் குவியும். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 19, 20, 21.

பரிகாரம்: அனுமந்தராயனை சனிக்கிழமை தோறும் வழிபட்டு வாருங்கள்.

கும்பம்
ஜீவன ஸ்தானம் ஆகிய 10ம் இடத்தின் வலிமையால் இந்த கார்த்திகையில் தொழில் முறை வெற்றிகளை தொடர்ந்து காண்பீர்கள். இந்த மாதத்தில் நிகழ உள்ள கிரகங்களின் மாற்று நிலையும் தொழில் முறையில் உங்களுக்கு சிறப்பான கௌரவத்தினைப் பெற்றுத் தரும்.

எல்லா விவகாரங்களிலும் இதுநாள் வரை கண்டு வந்த தடைகள் விலகி பணிகள் வேகமாக நடைபெறக் காண்பீர்கள். அரசாங்கக் காரியங்களில் இருந்து வந்த சுணக்கம் அகன்று எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் எளிதில் நடைபெறும்.

தனாதிபதியின் நிலை பண வரவில் முன்னேற்றத்தைத் தரும். பொருள் சேமிப்பில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும். அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்யும் எண்ணம் தோன்றும்.

அதே நேரத்தில் வீண் வம்பு வழக்குகளைச் சந்திக்கும் நிலை உருவாகலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. அதிகம் பேசுவதை விட அர்த்தத்தோடு பேசுவதன் அவசியத்தினை உணர்ந்திருப்பீர்கள்.

பேச்சுக்களின் வலிமையை விட எழுத்து மூலம் தெரிவிக்கும் கருத்துக்களினால் உங்கள் செயல்வெற்றி சாத்தியமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். உடன்பிறந்தோருக்கு சரியான சமயத்தில் ஆலோசனை வழங்கி உதவி செய்வீர்கள்.

உறவினர்களின் சந்திப்பால் நிலுவையில் இருந்து வரும் குடும்பப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகிய இனங்களில் ஆதாயம் உண்டாகும். மாணவர்களின் கல்வித் தரம் உயர்வடையும்.

பிள்ளைகளின் வாழ்வியல் தரத்தினில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும்.

பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்பு உருவாகலாம். கூடவே இருந்து குழி பறிக்கும் மனிதர்களை அடையாளம் காண வேண்டியது அவசியம்.

உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினைப் பெறுவர். கலைத்துறையினர் சிறப்பான தனலாபம் காண்பார்கள். வாழ்வியல் தரம் உயர்வடைவதோடு சிறப்பான கௌரவத்தினையும் அடையும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள் : நவம்பர் 22, 23.

பரிகாரம்: பௌர்ணமி நாளில் சத்யநாராயண விரத பூஜை செய்து வழிபடுங்க

மீனம்
கார்த்திகை மாதத்தில் உண்டாகும் கிரகங்களின் பல்வேறு மாற்று நிலைகள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது.

ராசிநாதன் குரு பகவானின் ஜீவன ஸ்தான சஞ்சாரமும், ஒன்பதாம் வீட்டில் மாறி மாறி அமரும் கிரகங்களின் நிலையும் உலகியல் சூழலைப் புரிந்துகொள்ளும் வகையிலான புதிய அனுபவங்களைத் தரும். பொது அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்வீர்கள்.

நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை அடுத்தவர்களோடு பங்கிட்டுக் கொள்வதில் மனமகிழ்ச்சி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் அகலும். உங்களின் பேச்சுக்களில் நீதி, நேர்மை, நாணயம் பற்றிய கருத்துக்கள் அதிகம் இடம்பெறும்.

நேர்மையான பாதையை நோக்கி உங்களின் நடவடிக்கைகள் அமையும். தத்துவார்த்த சிந்தனைகள் மனதினில் அதிகம் இடம்பெறும்.

குடும்ப சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்து வருவீர்கள். செலவினங்களை சமாளிக்கும் வகையில் வரவு நிலை சிறப்பாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் அதிக எச்சரிக்கை தேவை.

முன்பின் தெரியாதவர்களிடம் அநாவசியமாகப் பேசுவதைத் தவிர்க்கவும். வீண் வார்த்தைகளால் விவகாரம் முடிவிற்கு வராது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றலாம்.

தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதினில் பழுதாகி சிரமத்தினைத் தரும் வகையிலும், இரவினில் ஆதாயம் தரும் வகையிலும் அமையும். உயர்கல்வி மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பிள்ளைகளோடு இணைந்து செய்யும் காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.

வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினை நிறைவேற்றி மனமகிழ்ச்சி கொள்வீர்கள். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அயல்நாட்டில் பணிபுரிவோர் சிறப்பான ஆதாயம் காண்பார்கள்.

கலைஞர்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து வரும் அழைப்பினை ஏற்றுக்கொள்வதால் ஆதாயம் காண்பார்கள். நிதானித்துச் செயல்பட வேண்டிய மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 24, 25.

பரிகாரம்: மாரியம்மன் வழிபாடு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.