இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இதற்கு முன்பு நடந்த தேர்தலின் முடிவுகளும், அதன் சதவீதமும் தற்போது வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று, மாலை 5 மணியோடு முடிந்தது.
இந்த தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சாா்பில் கோத்தபய ராஜபட்ச (70), ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சாா்பில், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகனும், வீட்டு வசதி மற்றும் கலாசார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறாா்.
இந்த தேர்தல் முடிவு இன்று நள்ளிரவே தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு கிடைத்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜே. ஆர்.ஜெய்வர்த்தனே – 1982(52.91 சதவீதம்), ரணசிங்கே பிரேமதாசா – 1988 (50.43 சதவீதம்) ,சந்திரிகா குமாராதுங்கா -1994(62.28 சதவீதம்), சந்திரிகா குமாராதுங்கா – 1999 (51.12 சதவீதம்), மகிந்த ராசபக்ச -2005(50.29 சதவீதம்), மகிந்த ராசபக்ச -2010(57.88 சதவீதம்), மைத்திரிபால சிறிசேன -2015(51.28 சதவீதம்)
