வரப்போகும் புத்தாண்டு இந்த ஐந்து ராசிக்காரர்களும் அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப் போகின்றதாம்!

2020ஆம் புத்தாண்டு உங்களுக்கு அற்புதமான வளங்களை வாரி வழங்கப்போகிறது.

அந்தவகையில் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே. 2020ஆம் ஆண்டு உங்களுக்கு திடீர் உற்சாகத்தை தரும் ஆண்டாக அமைந்துள்ளது. முன்னேற்றத்தை தரும் மாற்றங்களை தரப்போகிறது.

குரு, சனி உங்களுக்கு நன்மைகளை தரப்போகிறது. விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார் குரு பகவான்.

2020 ஜனவரி மாதம் அஷ்டமத்து சனி முடிந்து பாக்ய சனி தொடங்குகிறது. சிலருக்கு காதல் மலரும். காதலில் அடி ஆழம் வரை சில ருசிப்பீர்கள்.

உங்க நிதி நிலைமை அதிக அற்புதமாக அமையப் போகிறது. உங்களுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப் போகிறது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2020ஆம் புத்தாண்டு புகழின் உச்சிக்கு கொண்டு செல்லப்போகிறது. உங்களின் எண்ணங்கள் செயல்பாட்டிற்கு வரப்போகிறது. உங்களின் வலிமையை உணர்வீர்கள். வெற்றிகள் தேடி வரும்.

நீங்க அதிர்ஷ்டசாலிதான். காரணம் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு பல நன்மைகளை செய்யப் போகிறது.

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

மண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் அற்புதமாக இருக்கப் போகிறது. அமைதியும் ஆனந்தமும் பிறக்கப் போகிறது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் ராசி அதிபதி. 2020ஆம் ஆண்டில் உங்களின் நிதி நிலைமை அற்புதமாக இருக்கப் போகிறது.

தொழிலில் புதிதாக நீங்க செய்யும் முதலீடுகள் உங்களுக்கு இரட்டிப்பு லாபத்தை தரும். புதிய முடிவுகளை சந்தோஷமாக எடுங்கள்.

அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு நன்மைகளையும் பரிசுகளையும் தேடி தரப்போகிறது.

மண வாழ்க்கை மகிழ்ச்சியை தரும். புதிய வேலை வாய்ப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை தரப்போகிறது. மொத்தத்தில் 2020ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையும்.

தனுசு
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. சில ஆண்டுகளாகவே நீங்க தடுமாற்றங்களை சந்தித்து வருகிறீர்கள்.

பல சோதனைகளை சந்தித்த நீங்கள் 2020ஆம் ஆண்டில் நல்லது நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறீர்கள். இந்த புத்தாண்டு உங்களுக்கு அற்புதங்களை தரப்போகிறது.

உங்க இலக்குகளை அடையும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் குடும்பத்திலும் தொழிலிலும் அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. நல்ல வாய்ப்புகள் வரிசையாக கதவை தட்டப்போகிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

வேலைக்காக செல்லும் பயணம் வெற்றிகரமாக முடியும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்பும் கிடைக்கும்.

மகரம்
ஏழரை சனியால் அவதிப்பட்டு வரும் மகரம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது.

இதுநாள் வரை நட்டு வைத்த அதிர்ஷ்ட மரம் பலன் கொடுக்கத் தொடங்கப்போகிறது.

உங்க ராசிநாதன் சனி உங்க ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். குரு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார்.

நல்ல வாய்ப்புகள் தேடி வரும் விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள்.

2020ஆம் ஆண்டில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் நல்லதே நடக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாடி சந்தோஷப்படுவீர்கள்.