இலங்கைக்காக நான் அழுகிறேன்..! நிதியமைச்சர் மங்கள சமரவீர உருக்கம்!

image_pdfimage_print

இலங்கைக்காக நான் அழுகிறேன் என அந்நாட்டு நிதியமைச்சர் மங்கள சமரவீர உருக்கமான பதிவிட்டுள்ளார்

மங்கள சமரவீர, புதிய ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்மொழிந்து பிரசாரத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலின் இறுதி அதிகாரப்பூர்வ முடிவு வெளிவந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, தோல்வியை ஏற்றுக்கொள்ளும் வகையில் ட்விட் செய்துள்ளார்.

ட்விட்டரில் பதிவிட்டதாவது, என் அன்புக்குரிய நாட்டிற்காக நான் அழுகிறேன். இரட்டை ரத்தினமான புத்தர் மற்றும் தர்மத்தின் ஆசீர்வாதம் இலங்கையுடன் இருக்கட்டும் என உருக்கமான பதிவிட்டுள்ளார்.

அதே சமயம், ஜக்கிய ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.