இலங்கை ஜனாதிபதி தேர்தலின் இறுதி அதிகாரப்பூர்வ முடிவு வெளியிடும் நேரம்? தேர்தல் ஆணையத் தலைவர் தகவல்!

image_pdfimage_print

தேர்தல் ஆணையத் தலைவர்

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இறுதி அதிகாரப்பூர்வ முடிவு வெளியிடப்படும் நேரம் குறித்த தகவலை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது, இதை தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கையில் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் இருப்பதாக தற்போதைய தகவல்கள் வெளிாயாகியுள்ளது.

அதே சமயம் சமூக வலைதளங்களில் தேர்தல் முடிவு வெளியாகிவிட்டதாகவும், குறிப்பிட்ட வேட்பாளர் வெற்றிப்பெற்றுவிட்டார் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இறுதி அதிகாரப்பூர்வ முடிவு மற்றும் இறுதி அறிவிப்பை இன்று மாலை 3 முதல் 4 மணிக்குள் வெளியிடலாம் என்று நாங்கள் நம்புகிறோம் என இலங்கை தேர்தல் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.