இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இவர் வெற்றி பெற்றுவிட்டார்! சுப்ரமணியன் சுவாமியின் வைரலாகும் பதிவு!

சுப்ரமணியன் சுவாமி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது, இதை தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழர்கள் வாழும் பகுதியில் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய தேசிய முன்னணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் ஒரு தீர்க்கமான மற்றும் தெளிவான பார்வை கொண்ட நபர் என தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, இது இந்தியாவுக்கு நல்லது எனவும் பதிவிட்டுள்ளார்.