நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த கோத்தபாய!

இலங்கை

நாட்டு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவு செய்யும் தேர்தல் நேற்றையதினம் அமைதியான முறையில் நடைபெற்றது.

வன்முறைகள் அற்ற அமைதியான தேர்தலை நடத்த உதவிய நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போது வெளியான தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அல்லாத பகுதிகளில் கோத்தபாய முன்னிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.