கோத்தபய ராஜபக்ச

இலங்கை ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ச நாளை அல்லது மறுநாள் பதிவியேற்பார் என 2019 இலங்கை பொதுஜன முன்னணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் செய்தித் தொடர்பாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
30 லட்ச வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 70 வயதான கோத்தபய 48.2 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆனால் சிங்கள பெரும்பான்மை பிராந்தியங்களின் முடிவுகள் மூலம் கோத்தபய வாக்கு 50 சதவிகிதத்திற்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுக்கு 53 முதல் 54 சதவிகிதம் வரை கிடைத்துவிட்டது என்று கோத்தபய செய்தித் தொடர்பாளர் கெஹலிய ரம்புக்வெல்லளர் தெரிவித்துள்ளார்.

இது மாபெரும் வெற்றி. நாள் எதிர்பார்த்தது தான். கோத்தபய அடுத்த ஜனாதிபதியாக இருப்பார் என்பதில் நாங்கள் மிகவும் மகிச்சியடைகிறோம். அவர் நாளை அல்லது மறுநாள் ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று ரம்புக்வெல்லளர் தெரிவித்துள்ளார்.
