வவுனியா தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ முடிவுகள் : சஜித் பிரேமதாச முன்னிலை!!

வவுனியா தேர்தல் தொகுதி

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது வன்னி மாவட்ட வவுனியா தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இதன்படி வன்னி மாவட்டத்திற்கான வவுனியா தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. வன்னி மாவட்ட வவுனியா தேர்தல் தொகுதி வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.

அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 65141 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 13715 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 667 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 552 வாக்குகளையும், எம்.எச்.எம்.ஹிஸ்புல்லா 191 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை (காலை 7.00 மணி) பெரும்பாலான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளிவந்துள்ளன. வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 691,998 (51.56%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். கோத்தபாய ராஜபக்ச 549,151( 40.92%) வாக்குகளையும், அநுரகுமார திஸாநாயக்க 43306(3.32%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் இதுவரை வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 80 விகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.