வாக்களிக்காத மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றுவேன்- புதிய ஜனாதிபதி கோத்தபாய!

ஜனாதிபதி கோத்தபாய

வாக்களிக்காத மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றுவேன்- புதிய ஜனாதிபதி கோத்தபாய

எனக்கு வாக்களித்த மக்களைப் போன்று வாக்களிக்காத மக்களுக்கும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு செயற்படத் தயாராகவுள்ளேன் எனவும், இலங்கை மக்கள் அனைவருக்கும் எனது சேவை உரித்தாகும் எனவும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்பொழுது நடைபெற்ற புதிய ஜனாதிபதியை அறிவிக்கும் விசேட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துமாறு தன்னிடம் விடுத்த வேண்டுகோளையும் உரிய முறையில் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தலை சிறப்பாக்க உழைத்த தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சகல தரப்பினருக்கும் தனது நன்றிகளையும் அவர் மேலும் குறிப்பிட்டார்.