இந்த வார ராசி பலன் ( நவம்பர் 18 முதல் 24வரை)…. எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?

இந்த வாரத்தில் எந்தெந்த ராசிகாரர்களுக்கு இனிய நாளாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்: வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவிற்கு இடமுண்டு. சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 22, 23, 24, அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

ரிஷபம்: பணவரவு தேவையான அளவுக்கு இருக்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பைக் கரைக்கும். அலுவலகத்தில் உங்களின் ஆலோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 18, 19, 21, 24, அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

மிதுனம்: பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் யோகமும் சிலருக்கு ஏற்படும்.

அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 19, 20, 21, அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்

கடகம்: எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புகழ் பெற்ற புனிதத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும்.

மாணவர்கள், ஆசிரியரின் அறிவுரை கேட்பதன் மூலம் மன அமைதி பெறலாம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 18, 19, 22, 23, அதிர்ஷ்ட எண்கள்: 5, 9, வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி

சிம்மம்: குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் விருப்பத்தின்படி நடந்துகொள்வார்கள். அவர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்புண்டு.

வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 18, 19, 20, 21, 24, அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கன்னி: பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.

நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.

அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 19, 21, 22, 23, அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

துலாம்: வார பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்ட நாள்கள்: 18, 19, 21, 24, அதிர்ஷ்ட எண்கள்: 6,7,9, வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்

விருச்சிகம்: அதிர்ஷ்டம் தரும் வாரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும்

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 20, 21, 22, 23, அதிர்ஷ்ட எண்கள்: 4, 9, வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்

தனுசு: வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பம் தொடர்பான. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள்.

வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நாள்கள்: 22, 23, 24, அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 18, 19, வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

மகரம்: பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. திருமண வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். கலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற் கும் வாய்ப்பு உண்டு.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 18, 19, 24, அதிர்ஷ்ட எண்கள்:5, 6, சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 20, 21, வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.

கும்பம்: பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. எதிர்பாராத பயணங்களும் அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும்.

உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். சிலருக்கு தந்தைவழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். மாணவர்கள் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட நாள்கள்: 18, 19, 20, 21, அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 22, 23, வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

மீனம்: பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். நல்ல வேலை கிடைக்கக்கூடும்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது.

அதிர்ஷ்ட நாள்கள்: 19, 20, 21, 22, 23, அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, சந்திராஷ்டம நாள்: நவம்பர் 24, வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி