நடனமாடி போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் கல்லூரி மாணவி – வைரலாகும் வீடியோ!

நடனமாடி!

மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவி போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

புனேவைச் சேர்ந்த சுபி ஜெயின் இந்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். சாலை விதிகளை மதிக்க வலியுறுத்தி அவர், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தலைக்கவசம் அணியவும், சீட் பெல்ட் அணியவும் அவர் அனைவரையும் வலியுறுத்துகிறார். போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றும் மக்களுக்கு சுபி ஜெயின் பாராட்டவும், வாழ்த்தவும் தவறுவதில்லை.

இந்நிலையில் அவர் சாலையில் ஆடல், பாடலுடன் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.