இலங்கை சிங்கப்பூராக மாறும் நாள் தொலைவில் இல்லை – ஜனாதிபதியின் திட்டங்கள் நடைமுறை

image_pdfimage_print

ஜனாதிபதிக்காக வழங்கப்படும் பாதுகாப்பு வாகன பேரணி மட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுவாக ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வாகன பேரணியில் அம்பியுலன்ஸ் உட்பட 15 – 20 வாகனங்கள் தொடரணியாக பயணிக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் புதிய தீர்மானத்திற்கமைய அந்த வாகனங்களின் எண்ணிக்கையை 2 அல்லது 3 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளார்.

அத்துடன் பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் சிலவற்றை மாத்திரம் உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வாகன பேரணி செல்லும் போது வீதிகள் மூடப்படுவது வழமையாகும். எனினும் இனிமேல் அவ்வாறு மூடாமல் இருப்பதற்காக ஜனாதிபதி தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 1200 இலிருந்து 200 ஆக குறைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவியேற்று நிகழ்வின் போது அரச நிறுவனங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டார். இதன்மூலம் 100 மில்லியன் ரூபா நிதி வீண் விரயம் தடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்று சில மணி நேரங்களில் ஜனாதிபதி மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கை குறித்து நாட்டு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பல மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் இலங்கை மற்றுமொரு சிங்கப்பூராக மாறும் என பலரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.