வித்தியாசமாக நடந்த கர்ப்பிணிப்பெண் : சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

கர்ப்பிணிப்பெண்

கர்ப்பிணிப்பெண் ஒருவர் நடக்கும்போது அவரது வயிறு வழக்கத்துக்கு மாறாக அசைவதைக் கண்ட பொலிசார் அவரை சோதனையிட்டபோது ஒரு பெரும் அ திர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது.

அர்ஜெண்டினாவில் எல்லை சோ தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிசார், ஒரு பேருந்தை மறித்து அதிலிருந்தவர்களை சோ தனையிட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு ஆணிடம் ஒரு பையில் இரண்டு பொட்டலங்கள் க ஞ்சா இருப்பது தெரியவரவே, அவரையும் அவரது மனைவியையும் கீழே இறங்கச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பெண் தான் கர்ப்பிணி என்று கூறியிருக்கிறார்.

ஆனால், அவர் நடக்கும்போது அவரது வயிறு வழக்கத்துக்கு மாறாக அசையவே, பொலிசார் அவரை சோ தனையிட்டிருக்கிறார்கள்.

சோ தனையில், அந்தப் பெண் கர்ப்பிணி அல்ல, அவர் தனது வயிற்றுப்பகுதியில் பொருத்தியுள்ள ஒரு பையில் 15 க ஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.