உ யிருக்கு போ ராடிய தந்தை : கல்லீரலை தானமாக கொடுத்த மகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவில் உ யிருக்கு போ ராடிய தந்தைக்கு மகள் தன்னுடைய கல்லீரலை கொடுத்து கா ப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்தவர் முருகன். 48 வயதான இவருக்கு கல்லீரல் செயல் இழந்தது. இதன் காரணமாக அவருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால், மாற்று அறுவை சிகிச்சைக்காக மூ ளைசாவு அடைந்தவர்களிடமிருந்து கல்லீரல் பெறுவதற்காக காத்திருந்தார்.

ஆனால் முருகனின் உ டல்நிலை மிகவும் மோ சம் அடைந்ததால், அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்புகளுக்காக பதிவு செய்து பலர் காத்திருந்து வரும் நிலையில் அவருக்கு கிடைப்பது சிரமமாக இருந்தது.

இதனால் அவரது மகள் தன் அப்பாவை காப்பாற்றுவதற்காக தன்னுடைய கல்லீரை தானமாக கொடுக்க முன் வந்தார். இதையடுத்து மருத்துவ குழுவினர் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் மகளிடம் இருந்து ஒரு பகுதி கல்லீரலை பிரித்தெடுத்து முருகனுக்கு வெற்றிகரமாக பொறுத்தினர்.

தற்போது இருவரும் நலமாக உள்ளனர். இந்த அறுவை சிகிச்சை சென்னையில் முதல் முறையாக நடந்துள்ளது. சிகிச்சைக்காக 22 லட்சம் ரூபாய் ஆனதாகவும், அதிலிருந்து 25 சதவீதத்தை மருத்துவமனை குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உ யிருக்கு போ ராடிய தந்தைக்கு மகளே கல்லீரலை கொடுத்து உயிர்பிழைக்க வைத்த சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வந்தது.

அவர் ஜெம் மருத்துவமனை தலைவர் சி.பழனி வேலு, தலைமை செயல் அதிகாரி டாக்டர் அசோகன், இயக்குனர் செந்தில்நாதன் மற்றும் டாக்டர்கள் சாமிநாதன், விஜய் ஆனந்த், ஸ்ரீவத்சன் ஸ்ரீனிவாசன் ஆகியோரை தலைமை செயலகத்துக்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

இவர்களுடன் நிவேதா, தாய் சாந்தி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.