பிரசவத்திற்கு பின் வயிற்று வ லியால் த த்தளித்த பெண் : மருத்துவரை நாடியபோது காத்திருந்த அ திர்ச்சி!!

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகேயுள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் 21 வயதான ரம்யா என்ற பெண்.

கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வ லி ஏற்பட்டதால் கடந்த 17-ம் தேதி உச்சிபுளி அரசு சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் 19ம் தேதி அவருக்கு பிரசவ வ லி மீண்டும் ஏற்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்துக்கு பிறகு தாயும் சேயும் நலமுடன் இருந்துள்ளனர்.

ஆனால் ரம்யாவுக்கு கடந்த 2 நாட்களாக வயிற்று வ லி ஏற்பட்டுள்ளது.மேலும் இரத்த கசிவும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ரம்யாவை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் அவரது உறவினர்கள்.

அப்போது ரம்யாவை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது பிரசவத்தின் போது அவரது வயிற்றில் ஊசியை வைத்து தைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து அதி ர்ச்சியடைந்த ரம்யாவின் உறவினர் உச்சிபுளி அரசு சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கவனக்குறைவாக பிரசவம் பார்த்த செவிலியர்களை கைது செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

இதனிடையே அறுவை சிகிச்சை செய்து ஊசியை வெளியே எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார இணை இயக்குநர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.