எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொண்ட துலாம் ராசியாளர்களே…2020 உங்களுக்கு சந்தோஷமான வருடமாக அமையப்போகுதாம்!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்களில் துலாம் ராசிக்கு எப்படி இருக்க போகுது என பார்ப்போம்.

எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொண்ட துலாம் ராசியாளர்களே, உங்களுக்கு இந்த வருடம் பல சந்தோஷங்களையும், சில சங்கடங்களையும் கொண்டதாக அமையும். உங்களுக்கு இந்த சமூகத்தில் இருந்த தாழ்வான நிலை மாறி மதிப்பும் மரியாதையும் கூடும்.

தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொதுவான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பொன், பொருள், ஆடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்பு உள்ளது.

கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் ராசிக்கு 4ல் சனி இருந்து கொண்டு 6ஆம் இடத்தைப் பார்ப்பதால், உங்கள் தாயின் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனித்து கொள்வது நல்லது. குழந்தைகளின் நட்பு வட்டாரத்தை சரி செய்ய வேண்டும். தேவையற்ற அலைச்சல்கள் நீங்கி நிம்மதி அடைவீர்.

மாணவர்கள் – உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான கும்பராசியை குரு பார்க்கவில்லை. சனியும் பார்க்கவில்லை. ஆனால் சனி பகவான் உங்கள் 4ஆம் இடத்தில் இருப்பதால், நீங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அன்றைக்கு உண்டான பாடங்களை அன்றே படித்து விட வேண்டும். அடுத்த நாள் படித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வராமல் படித்தால் மட்டும் தான் முன்னேற்றம் அடைய முடியும். அதிக முயற்சி தேவை.

திருமணம் -உங்கள் ராசிக்கு 5-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் கண்டிப்பாக நிச்சயிக்கப்படும்.

சுபகாரியத் தடை விலகும். மனசஞ்சலம் தீரும். சந்தோஷமான வருடமாக இது அமையப் போகிறது.

ஆனால் சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் உடல்நலனில் பிரச்சனை உள்ளது போன்ற பிரமை இருக்கும். இதனை நீங்கள் வெளிக்காட்டிக் கொண்டால் உங்கள் திருமண பேச்சில் பிரச்சனைகள் ஏற்படும்.

வேலைவாய்ப்பு – 4 ல் உள்ள சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான கடகத்தை பார்ப்பதினால் வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

உங்களை விட திறமை குறைவாக உள்ளவர்களுக்கு கூட வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நீங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஏப்ரல் மாதம் வரைதான் இந்த கஷ்டம் நீடிக்கும். அதன் பிறகு உங்களின் திறமைகள் நிரூபிக்கப்பட்டு வெற்றி பெறுவீர்.

சொந்தத் தொழில் – சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு 10ல் சனி பகவானின் பார்வை இருப்பதால் தொழில் முன்னேற்றம் நிதானமாகத்தான் இருக்கும்.

நிதானமாக உயரும் முன்னேற்றமானது பிற்காலத்தில் உங்களுக்கு நிலைத்து நிற்கும்.

தற்போது ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டதாக தான் அமையும். தேவைப்பட்டால் கடன் வாங்கலாம் அதிகமான தொகையை தேவை இல்லாமல் மூலதனம் செய்வதன் மூலம் சிக்கல் ஏற்படும்.

வேலைக்கு செல்பவர்களுக்கு – உங்கள் வேலை சுமை அதிகமாக இருக்கும். உங்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.

ஆனால் உங்கள் சாமர்த்தியத்தால் இந்த கஷ்டங்களை எல்லாம் நீங்கள் கடந்து செல்வீர்கள். கஷ்டங்கள் இருந்தாலும் எந்தவித கெடுதலும் நடக்காது.

பரிகாரம் – குலதெய்வ வழிபாடு அவசியமானது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மியையும், துர்க்கையையும் வழிபட்டால் உங்கள் பிரச்சனைகள் தீரும். பசுவிற்கு பச்சரிசி, வெல்லம் இவற்றை தானமாக அளிக்க வேண்டும்.