எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் கடக ராசிக்காரர்களே… 2020 இல் சனி உங்களை ஆட்டிப்படைக்க போகிறாராம்!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்களில் கடக ராசிக்கு எப்படி இருக்க போகுது என பார்ப்போம்.

எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் கடக ராசிக்காரர்களே, கடந்த இரண்டு வருடங்களாக சந்தோஷத்தை மட்டும் அனுபவித்து வந்த நீங்கள் இந்த வருடம் நன்மைகளையும், தீமைகளையும் சரிசமமாக அனுபவிக்க போகிறீர்கள்.

உங்கள் ராசிக்கு 7ல் சனி வரப் போகின்றார். இதனால் சில சங்கடங்கள் வரும்.

சனி தன் சொந்த வீட்டில் இருப்பதால் வக்கிர நிலை குறைவாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். உங்களின் வாக்குவன்மை அதிகரிக்கும். புதிய உறவுகள் தேடிவரும். உறவினர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து, விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

ஏனென்றால் உறவுகளுக்கிடையே பிரிவை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது.

சங்கடங்களை எதிர்கொள்ள தான் வேண்டும். சங்கடங்களை சந்தோஷமாக மாற்றும் நேரம் விரைவில் வரும்.

மாணவர்கள் – 5ல் குரு இருந்து பல நல்ல பலன்களைக் கொடுத்து இருந்தாலும், தற்சமயம் 6ஆம் இடத்தில் மறையப் போகின்றார்.

6ல் இருந்து 12ம் இடமான விரய ஸ்தானத்தை பார்க்கின்றார். இதனால் கல்வி பயில்வதில் பல நன்மைகள் இருந்தாலும், உங்களின் சோம்பல் தன்மையினால் சிறு சிறு பிரச்சனைகள் வரும்.

சோம்பலை தவிர்த்து கல்வியில் ஆர்வத்தை அதிகப்படுத்துவது நல்லது.

உங்கள் நண்பர்கள் கெட்டவர்கள் என்று தெரிந்தால், அவர்களின் நட்பினை தள்ளி வைக்க வேண்டும். மாணவர்கள், பெற்றோரின் அறிவுரையை கேட்டு நடந்து கொள்ள வேண்டிய காலம் இது.

திருமணம் – திருமணத்தடை விலகும். கணவன் மனைவி இடையே அநாவசியப் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது.

நிச்சயம் ஆனவர்களாக இருந்தால், திருமணத்திற்கு பிறகு உங்களின் அன்பை வெளிப்படுத்துவது நல்லது. கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு.

வேலைவாய்ப்பு- நீங்கள் எதிர்பார்த்த வேலை, நீங்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில், எதிர்பார்த்த ஊதியத்தில், எதிர்பார்த்த பதவியில் கிடைக்கும்.

அந்த வேலை உங்களுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கும். அது உங்களுக்கு பல மடங்கு பலத்தை தந்து உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.

தொழில் – சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், உங்கள் ராசிக்கு 7ல் சனி இருக்கின்றார்.

2ஆம் இடத்தை குரு பார்க்கின்றார். உங்கள் தொழில் எந்த பாதிப்பும் இல்லாமல் முன்னேற்றமடையும்.

ஆனால் உங்களைப் பற்றிய தவறான வதந்திகள் வெளியில் பரவுவதற்கான வாய்ப்பு உண்டு. எக்காரணம் கொண்டும் அதனை வளர விட வேண்டாம்.

முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம் இது. தேவைப்பட்டால் மட்டும் கடன் வாங்குவது நல்லது. சேமிப்பது பிற்காலத்தில் உதவும் என்பதை மறவாதீர்கள்.

வேலைக்கு செல்பவர்கள்- குரு 6ல் இருந்து 10ஆம் இடத்தைப் பார்ப்பதால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

நீங்கள் எதிர்பார்க்கும் சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருப்பது நல்லது. உங்களுடன் இருக்கும் நண்பர்களே உங்களின் பின்னால் குழி தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பரிகாரம் – குலதெய்வ வழிபாடு அவசியமாகும். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் முருகனை வழிபடுவதன் மூலம் தொழிலில் வரும் சங்கடங்களை தவிர்க்கலாம். பசுவிற்கு தானம் செய்வது நன்மையை தரும்.