தமிழ் பெயர் பலகைகளை சேதப்படுத்துவோரை கைது செய்யுமாறு பிரதமர் உத்தரவு! மீண்டும் தமிழில் பெயர்பலகை!

பிரதமர் உத்தரவு!

வீதிகளில் காணப்படும் தமிழ் பெயர்ப் பலகைகளை சேதப்படுத்துவோரை கைது செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலையடுத்து இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தமிழ் பெயர் பலகைகளில் எழுதப்பட்டிருந்த ஊர்களின் பெயர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் சமூக வளைதளங்களில் பல்வேறு தரப்பினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு வீதிப் பெயர்ப் பலகைகளை சேதப்படுத்தும் தரப்பினரை உடனடியாக கைது செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான கு ற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எ திராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமெனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து பாணந்துறை நகர சபை எல்லைக்கு உட்பட்ட வீதிப் பெயர்ப்பலகை தமிழ் மொழியில் மீண்டும் காட்சியளிக்கின்றது.

மேலும் வத்தளை – கரவலபிட்டி வீதியின் பெயர் பலகையும் 9 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது..