பெளத்த துறவி

மத நல்லிணக்கம் மட்டுமே இன நல்லிணக்கத்தை நோக்கிச் செல்லும். குறித்த படத்தில் உள்ள பிக்கு சிவலிங்கம் தமக்கு உரித்தான கடவுள் என்ற எண்ணப்பாடு அன்றி பூஜை வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நிச்சயமாக பாராட்டலாம்.

ஆம் இரத்தினபுரி ரக்வென பகுதியில் சகோதர மதத்தை சேர்ந்த பௌத்த பிக்குவான பகவந்தலாவ ராகுல தேரர் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு பூஜைகள் செய்த சிறந்த தருணம் இது. இந்த தீவினிலே தற்போதுள்ள சூழலில் இது ஒன்றே அவசியம். இன நல்லிணக்கம் அற்று காணப்படும் இத்தீவில் மத நல்லிணக்கமே இன நல்லிணக்கத்தை நோக்கி செல்ல வழிவகுக்கும்.

மனிதம் இங்கே ம ரணித்துக்கொண்டிருக்கும் தருவாயில் மத நல்லிணக்கம் பற்றி நாம் அனைவரும் அறிந்துவைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

இலங்கை வளர்ச்சி பாதையை நோக்கி வேகமாக பயணிக்கும் நாடாகும். வளமானதும் அழகானதுமானமான நாடாகும். நாட்டின் வளர்ச்சியை மேலும் முன்னேற்றகரமானதாக மாற்ற வேண்டுமாயின் இங்கு வாழும் மக்கள் இன, மத பேதமில்லாமல் ஒன்றிணைய வேண்டும்.
அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்க கூடிய ஆற்றல் மொழிக்கு மாத்திரமே உண்டு. இனங்களுக்கிடையிலான பாலமாக மொழி விளங்குகின்றது. இவற்றிற்கு வழிவகை செய்யும் முதற்படியாக அமையக்கூடியது மத நல்லிணக்கம் என்றால் மிகையாகாது.

உண்மையான மத நல்லிணக்கம் எல்லா மதங்களையும் வளர்க்குமேயல்லாமல் எந்த ஒரு மதத்தையும் அ ழிக்காது. மத நல்லிணக்கம் என்பது மக்களிடையே நட்பை, அன்பை, அமைதியை உருவாக்கக் கூடியது. மத நல்லிணக்கம் என்பது மனிதத்தைக் காக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று.

உங்களுக்கு தெரியும், அண்மையில் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் நடந்த சம்பவம் பெரும் விரக்தியையும் அதிருப்தியையும் எம்மவர் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. அதுவும் குறிப்பாக நீதிமன்ற உத்தரவையும் மீறி அந்த சம்பவம் அரங்கேறியது. இப்படியான மத நல்லிணக்கத்திற்கு களங்கம் விளைவிக்கக்கூடிய செயல்கள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்நிலையிலேயே, சிவலிங்கத்திற்கு பூஜை செய்கிறார் சகோதர மொழியை சேர்ந்த பௌத்த பிக்குவான பகவந்தலாவ ராகுல தேரர். குறித்த பிக்கு சிவலிங்கம் தமக்கு உரித்தான கடவுள் என்ற எண்ணப்பாடு அன்றி பூசை வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நிச்சயமாக பாராட்டலாம்.
ஏன் என்றால்? மத நல்லிணக்கம் என்பது அலங்கார வார்த்தையாக பயன்படுத்தப்படும் ஒரு சொல் அல்ல. அது மனப்பூர்வமாக நடை முறையில் செயல் படுத்தப்பட வேண்டிய விடயம். மத நல்லிணக்கம் என்பது இன்றைய உலகின் அவசியத் தேவை. உலகிலே எந்த ஒரு சமுதாயமும், எந்த ஒரு நாடும் தனித்து இயங்க முடியாது என்கிற அளவிற்கு பொருளாதார, சமூக, கலாச்சார இணைப்புகள் அதிகமாகி வருகின்றன.
இந்த நிலையிலே மத நல்லிணக்கம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை அனைவரும் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் செயற்பட்டால் இந்த இலங்கை தீவில் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலைக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.
