முல்லைத்தீவு முள்ளியவளையில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழை!

கனத்த மழை!

முல்லைத்தீவு முள்ளியவளையில் இன்று காலை தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் வீதிகள் அனைத்தும் நீர் நிரம்பி வெள்ளகாடாக காட்சியளிக்கின்றது.

மூன்று மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் முல்லைத்தீவு – மாங்குளம் வீதிகளில் நீர் தேங்கி நிற்பதுடன் தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

வடிகான்கள் சரியான முறையில் சீர் செய்யப்படாமையாலேயே வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாக வர்த்தகர்கள், மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இயற்கையின் இவ்வாறான பாதிப்புக்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லை நியூஸ் செய்திகளுக்காக படங்கள் – Nijopavan