இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
இடுக்கண் வருங்கால் நகுக என்பதற் கேற்ப துன்பங்கள் வந்தாலும் அதனை மனதுக்குள் மறைத்து வெளியில் மகிழ்ச்சியை காண்பிக்கும் திறனுடைய மேஷ ராசியினரே இந்த வாரம் பல வகையிலும் நற்பலன் களை தரும். தெய்வபக்தி அதிகரிக்கும்.
பயணங்கள் மகிழ்ச்சிதரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். வீண்பழி உண்டாகலாம். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.
குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும்.
பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.
பரிகாரம்: முருகனை நினைத்து வணங்கி வர நீண்ட நாள் தடைகள் விலகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

ரிஷபம்
வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக் கும் வெள்ளை உள்ளம் கொண்ட ரிஷப ராசி யினரே இந்த வாரம் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்னைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங் கள் கைகூடும். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர் களை அனுசரித்து செல்வது நல்லது.
கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது.
குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமத மாகும்.
மனகவலை ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய கடின உழைப்பு தேவை. எல்லோ ரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: தினமும் மகாலட்சுமி அஷ்டகம் சொல்லி நமஸ்காரம் செய்யுங்கள். பிரச்சினைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

மிதுனம்
யானையை பூனையாக்குவதும், பூனையை யானை ஆக்குவதும் என்பது போல எந்த விஷயத்திலும் சின்னதை பெரியதாகவும், பெரியதை சிறியதாகவும் மாற்றும் கலையை அறிந்த மிதுன ராசியினரே இந்த வாரம் தேவையான உதவிகள் கிடைக்கும்.
பண வரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
பயணங்களால் வீண் செலவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற மான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு புதிய பதவி தேடிவரும்.
வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனு சரித்து செல்வது நன்மை தரும். பிள்ளை கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையு டன் நடந்து கொள்வது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
பரிகாரம்: அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வர தீமைகள் எதுவும் ஏற்படாது.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

கடகம்
என் கடமை பணி செய்து கிடப்பதே என்பது போல பிரதிபலன் எதிர்பார்க்கா மல் காரியங்களை செய்யும் குணமு டைய கடகராசியினரே இந்த வாரம் ராசி எதிர்ப்பு கள் விலகும். எல்லா நன்மைகளும் உண் டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக் கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். புத்திசாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். உத்தியோகத்தில் இருப் பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறு வார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளை கள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
பரிகாரம்: அம்மனை நினைத்து வணங்க பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

சிம்மம்
எதையும் தாங்கும் இதயம் என்பதுக் கேற்றார் போல் எதைக்கண்டும் கலங்காமல் எதிர்த்து நிற்கும் இயல்புடைய சிம்ம ராசியினரே இந்த வாரம் எதிர்பாராத செலவு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இந்த வாரம் இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும்.
எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள்.
வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை.
பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செய லாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதக மான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.
பரிகாரம்: கிரிவலம் வர நன்மைகள் அதிக அளவில் நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

கன்னி
வேகத்திலும் விவேகம் தேவை என்பதை உணர்ந்து வேகமாக எதையும் செய்தாலும் அதில் உள்ள நன்மை தீமை அறிந்து செயல்படும் கன்னிராசியினரே இந்த வாரம் பிரயாணத்தில் தடங்கல் உண்டாகும். திட்ட மிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும்.
வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலை பளு குறையும். குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டை கள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒரு வருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல் வது நல்லது.
பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள்.
மனோ திடம் கூடும். மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற் படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.
பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று பச்சை பட்டு வாங்கி சாற்றுங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

துலாம்
நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதற் கேற்ப ஒரு பக்கம் சாதகமாகவும், மறு பக்கம் பாதகமாகவும் நடந்து கொள்ளாமல் ஒரே நிலையை கடைபிடிக்கும் துலா ராசி யினரே இந்த வாரம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும்.
வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்க ளிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறை யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண்அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும்.
குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள் ளைகள் சொல்வதை கேட்டு நிதான மாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை.
பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக் கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ யோக நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து வழிபட பிரச்சினைகள் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

விருச்சிகம்
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பதற்கேற்றவாறு எதை செய்தாலும் அதில் உள்ள லாப நஷ்டங்களை கணக் கிடும் குணமுடைய விருச்சிக ராசியினரே இந்த வாரம் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும்.
வீண் பகை உண்டாக லாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. இந்த வாரம் நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல் படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
குடும்பத்தில் காணாமல் போன சந்தோ ஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற் றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவ காரங்களை விட்டு விலகுவது நல்லது.
பரிகாரம்: உடல் ஊனமுற்றோருக்கு உதவுங்கள். அவர்களுக்கு அரிசி தானமிடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

தனுசு
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத உத்தமர் என்பதற்கேற்ப மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய தனசு ராசியினரே இந்த வாரம் பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக் கும்.
இந்த வாரம் தொடங்குவதால் வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக் கும். பெயரும், புகழும் கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப் படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும்.
பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.
பரிகாரம்: நவகிரகத்தில் இருக்கும் குருவை வழிபட பிரச்சினைகள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.

மகரம்
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லக்கூடிய எதிலும் பின்வாங்காத அஞ்சா நெஞ்சம் உடைய மகர ராசியினரே இந்த வாரம் வீண் செலவு ஏற்படும். காரியங் களில் தாமதம் உண்டாகும்.
உடற்சோர்வு மன சோர்வு வரலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல் கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படி யான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம்.
கணவன், மனைவிக்கிடையே மன வருத் தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்க ளிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.
பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்பு களை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: நவகிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து வேண்டியதை பெற்றுக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

கும்பம்
வேதனையையும் சாதனையாக மாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக துன்பத்தையும், இன்பமாக மாற்றும் வல்லமை பெற்ற கும்பராசியினரே இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும்.
விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறு வீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட் கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளை கள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.
பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு இருசக்கர வாகனங் களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.
பரிகாரம்: நவகிரகத்திற்கு மல்லிகை மலர் கொடுத்து வணங்கி வர காரியங்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

மீனம்
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல மற்றவர்களுக்கு பிடித்தா லும் பிடிக்காவிட்டாலும் நான் செல்வது தான் சரி என்று உறுதியாக கூறும் மீன ராசியினரே இந்த வாரம் காரிய அனுகூலங்களை தரும். மனோ திடம் அதிகரிக்கும்.
பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும்.
இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத் துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணி களை மேற்கொள்வது நல்லது. மேல் அதி காரிகள் மற்றும் சக ஊழியர்களை அனு சரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம்.
பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரம்: சப்த மாதாக்களை வழிபட்டு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
