இரட்டை தலைகள், மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை!!

அதிசய குழந்தை

மத்திய பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி இணைந்த இரட்டையர்களைப் பெற்றெடுத்துள்ளார். மத்திய பிரதேசத்தின் விடிஷா நகரை சேர்ந்த பபிதா அஹிர்வார் (21) என்கிற பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பபிதா தன்னுடைய முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் இரட்டையர்கள் ஒட்டிப்பிறந்துள்ளனர்.

தற்போது, தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர். ஆனால் மருத்துவர்களின் கூற்றுப்படி, அத்தகைய குழந்தைகள் பிழைத்து சாதாரண வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

விடிஷாவில் இது போன்று பிறப்பது முதல்முறை. வழக்கமாக, பெண்ணின் வயிற்றில் உள்ள கரு சரியாக உருவாகாதபோதுதான் இது நிகழ்கிறது. இந்த நிலை ஒரு மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது என தெரிவித்துள்ளனர்.