உலகின் மிகப் பெரும் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் மனைவியை எப்படி பார்த்து கொள்கிறார்? 25 ஆண்டுகால ரகசியம்!

பில்கேட்ஸ்

உலகின் மிகப் பெரும் பணக்காரராக இருக்கும் பில்கேட்ஸ், தன்னுடைய வேலைகளுக்கு மத்தியில் மனைவிக்கு தினமும் பாத்திரம் துலக்க உதவுவது தற்போது தெரியவந்துள்ளது.

உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலில், இப்போது பில்கேட்ஸ் 106.2 பில்லியன் அமெரிக்க டொலருடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இவரை தற்போது இருக்கும் இளைஞர்கள் பலரும் தங்களின் ரோல்மொடலாக எடுத்து தீவிரமாக உழைத்து வருகின்றனர். பொது வாழ்வில் வெற்றியடைந்துள்ள, பில்கேட்ஸ் குடும்ப வாழ்க்கையை எந்த ஒரு பிரச்னையுமின்றி நகர்த்துவது எப்படி? மனைவிக்கும், அவருக்கும் இடையே இருக்கும் காதல் போன்றவை குறித்து, தங்களுடை திருமண வாழ்க்கையில் 25-ஆம் ஆண்டை தாண்டி செல்லும், அவரின் மனைவி மெலிண்டா கூறியுள்ளார்.

பில்கேட்ஸ் மெலிண்டாவை கடந்த 1994-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண் என்று மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கிடையே சின்ன சின்ன விட்டு கொடுத்தல் தான் அவர்களின் உண்மையான மகிழ்ச்சிக்கு அடித்தளமாக அமையும், அதுமட்டுமின்றி மனைவி செய்யும் சில வேலைகளின் போது கணவர் அவர்களுக்கு உதவி செய்தால், அது இருவருக்குமிடையே இருக்கும் காதலை அதிகரிக்கும்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பில்கேட்ஸைபோல் ஒரு நல்ல கணவர் எனக்கு கிடைத்திருப்பது நான் செய்த பாக்கியம் தான், அவர் வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு மிகப் பெரிய பணக்காரராக பார்க்காமல் எவ்வளவு பிரச்னை இருந்தாலும், அதை எல்லாம் மறந்து தினமும் இரவு சாதரண கணவராக இருந்து, வீட்டில் இருக்கும் பாத்திரங்களை துலக்குவதற்கு எனக்கு உதவுவார், அதுவே எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் புரிந்துணர்வு என்று கூறி முடித்துள்ளார்.

இதை இருவரும் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவழிக்கக் கிடைக்கும் வாய்ப்பாக இதை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

பில்கேட்ஸ் தன் வருமானத்தின் ஒரு பகுதியை உலகளாவிய வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு, விவசாயம் போன்றவைகளுக்கு அளித்துவருகிறார். இதற்காக உருவாக்கப்பட்ட பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை சார்பில் உலகம் முழுவதும் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 1.8 பில்லியின் அமெரிக்க டொலர்களை செலவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.