எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் கொண்ட விருச்சிக ராசியாளர்களே … 2020 உங்களுக்கு இனி நல்ல காலம் பிறக்கப் போகுதாம்!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்களில் துலாம் ராசிக்கு எப்படி இருக்க போகுது என பார்ப்போம்.

எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியமும், திறமையும் கொண்ட விருச்சிக ராசியாளர்களே இந்த வருடம் உங்களுக்கு சந்தோஷமான வருடமாக அமையப் போகின்றது. கடந்த 8 வருடங்களாக நீங்கள் பட்ட அனைத்து அவமானத்திற்கும், கஷ்டத்திற்கும் விடிவுகாலம் வந்துவிட்டது.

உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உங்களை சுற்றி உள்ளவர்கள் இடத்தில் உங்களுக்கு இருந்த கெட்டபெயர் இனி மறைந்துவிடும்.

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளால் சந்தோஷமும், மன அமைதியும் அடைவீர்கள்.

குடும்பத்தில் புதிய உறவுகளுக்கான வருகை உண்டாகும். உங்களின் வாக்கு வன்மை அதிகரித்தாலும், உங்கள் உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது.

உங்கள் ராசிக்கு சனி பார்வை இருப்பதால் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது அவசியம். மருத்துவத்தில் வீண்விரயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள் – உங்கள் ராசிக்கு 4ஆம் இடத்திற்கு சனி பார்வை வரப்போகிறது. குருவின் பார்வை 6ஆம் இடத்திற்கு சென்று விட்டது. இதனால் நீங்கள் படித்ததை உங்களால் நினைவு வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும்.

மனதை ஒரு நிலைப்படுத்தி, கல்வியில் அதிக ஆர்வம் காட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும். இல்லையென்றால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

திருமணம் – 7ஆம் இடமான விரய ஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் உங்கள் வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் திருமணம் நடக்கும்.

சந்தோசமான வாழ்க்கை உங்களுக்கு அமையும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விடும்.

வேலைவாய்ப்பு – இதுவரை சனிபகவானாலும், குருவினாலும் சங்கடங்களை அனுபவித்த உங்களுக்கு இனி நல்ல காலம் பிறக்கப் போகிறது.

உங்கள் தகுதிக்கும், நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்திலும், நீங்கள் எதிர்பார்த்த பதவியிலும், உங்கள் மனதிற்கு பிடித்த படி இந்த வருடம் நிச்சயம் வேலை கிடைக்கும். இந்த வருட ஆரம்பமே உங்களுக்கு அமோகம் தான்.

தொழில் – சொந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு 10ஆம் இடமான சிம்ம ராசிக்கு குரு பார்வை உள்ளதால் பல நன்மைகள் கிடைக்கப் போகிறது. இத்தனை நாட்களாக இருந்த தடை விலகும்.

முன்னேற்றம் அடைய கூடிய காலமாக இந்த வருடம் அமையும். புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் தொழில் அமோக வளர்ச்சி பெறும்.

தேவையற்ற அலைச்சல்கள் நீங்கி நிம்மதி பெறுவீர். தேவைப்பட்டால் மட்டும் கடன் வாங்கி கொள்ளலாம். ஆனால் உங்கள் வார்த்தையில் மட்டும் நிதானம் தேவை. அவசியமாக பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும் தவறு.

வேலைக்கு செல்பவர்களுக்கு – நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, எதிர்பார்த்த சம்பள உயர்வு, மரியாதை கிடைக்கும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. உங்கள் அலுவலகத்தில் ராஜமரியாதை உங்களுக்கு கிடைக்கப் போகும் வருடமாக அமையும்.

பரிகாரம் – குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம். வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை சுண்டல் செய்து குருவிற்கு நைவேத்தியமாக படைத்து, அந்த பிரசாதத்தை குழந்தைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

பசுவிற்கு பச்சரிசி வெல்லம் கொடுத்து வருவது நன்மை தரும்.