நலம் விசாரிக்க வந்த உறவினர் வீட்டில் காதல் ஜோடியின் செயல்… கையும் களவுமாக சிக்கியதால் வெளியான பல உண்மைகள்

சென்னையில் பொறியியல் பட்டதாரியான காதல் ஜோடிகள் உறவினர்கள் வீட்டிற்கு நலம் விசாரிப்பது போல் சென்று திட்டம்தீட்டி திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போரூரை அடுத்த காரம்பாக்கத்தில் ஜெகதீஷ்(36) என்பவரது வீட்டில் சமீபத்தில் 5 பவுன் நகை காணாமல் போயுள்ளதை அடுத்து பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

வேலைக்குச் செல்லும் இவர் வழக்கமாக சாவியை வைக்கும் இடத்தில் பூட்டி வைத்துவிட்டு சென்றுள்ளார். பின்பு அவர்கள் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி காட்சியினை பொலிசார் ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேர் அந்த வீட்டிற்கு வந்து சென்றுள்ளது தெரியவந்தது. வந்தவர்கள் அவர்களது சொந்தக்காரரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

உடனே பொலிசார் கார்த்திகேயன்(24), மதுரவாயலை சேர்ந்த அவரது காதலி நித்யா(24) என இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் பொறியியல் பட்டதாரி என்பதும் சொந்தமாக தொழில் தொடங்கி நஷ்டம் ஏற்பட்டதால், நஷ்டத்தினை சமாளிக்கவும், ஆடம்பரமாக வாழ்வதற்காக இவ்வாறு சொந்தக்காரர்கள் வீட்டில் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

உறவினர் வீட்டிற்கு நலம்விசாரிப்பது போன்று வந்து செல்லும் இவர்கள், அவர்கள் வெளியே செல்லும் போது சாவியை எங்கு வைப்பார்கள் என்பதை நோட்டமிடுகின்றனர். அதன்படி அவர்கள் வெளியே சென்றதும் வீட்டிற்குள் நுழைந்து பணம், நகையினைத் திருடிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதற்கு முன்பு பல உறவினர்கள் வீட்டில் இந்தவேலையில் ஈடுபட்ட இவர்கள் மீது பொலிசில் யாரும் புகார் அளிக்கவில்லை. காரணம் உறவினரது மகன் என்ற காரணத்தினால் அவ்வாறு செய்யவில்லையாம்.

தற்போது குறித்த காதல் ஜோடியிடம் 5 பவுன் நகையை பறிமுதல் செய்த பொலிசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.