முல்லைத்தீவு- குமுளமுனை மகா வித்தியாலயத்தில்; சாந்தி சிறிஸ்காந்தராசா எம்.பியின் விசேட நிதியில் கட்டப்பட்ட மதில் உடைந்து விழுந்தது!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசாவின் விசேட நிதியில் அமைக்கப்பட்ட பாடசாலை மதில் உடைந்து விழுந்துள்ளது.

முல்லைத்தீவு குமுளமுனை மகா வித்தியாலயத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவின் விசேட நிதி ஒதுக்கீட்டில் குறித்த சுற்றுமதில் அமைக்கப்பட்டது.

பாடசாலை அபிவிருத்தி சங்கத்தால் அமைக்கப்பட்ட குறித்த சுற்றுமதில், அதிபரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. பருவ மழைக்கு தாக்குப்பிடிக்காத வகையில் குறித்த மதில் அமைக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களை விசனத்திற்குள்ளாக்கியுள்ளது.

கம்பரலிய திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பில் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்துள்ளன. இந்நிலையில், பாடசாலையின் சுற்று மதில் உடைந்துள்ளமை கம்பெரலிய திட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தி பணிகளின் தரத்தையும் சோதனைக்குட்படுத்தும் வகையில் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.