பல ஆண்டுகளாக சேமித்து வைத்த பணம்: பேரன், பேத்திகளுக்கு கொடுக்க நினைத்த மூதாட்டிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சேமித்து வைத்த பணம்

தமிழகத்தின் பேரன், பேத்திகளுக்காக பல ஆண்டுகளாக இரண்டு பாட்டிகள் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கண்ட மகன்கள், அந்த பணம் அனைத்தும் செல்லாது என்று கூறியதால், அவர்கள் வேதனையில் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கும் பூமலூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள் (75) தங்கம்மாள் (78) . இவர்கள் இருவரின் கணவர்களும் உயிரிழந்தவிட்ட நிலையில், சகோதரிகள் தங்களின் மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போக, மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டதால், மகன்கள் சிரமப்படுவதைக் கண்டு அவர்கள் இருவரும் தங்களிடம் பணம் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து இருவரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொடுக்க, அதைக் கண்ட மகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏனெனில் அந்த பணம் எல்லாம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள், இதை மகன்கள் கூறியதால், அவர்கள் பணம் எல்லாம் அவ்வளவுதானா, பல ஆண்டுகளாக சிறுக, சிறுக இறுதி காலத்தில் பேரன், பேத்திகளுக்காக கொடுக்க சேர்த்து வைத்த பணம், செல்லாது என்று கூறினால் எப்படி என்று வேதனையடைந்துள்ளனர்.