முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்!

மாவீரர் நினைவேந்தல்!

மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு துயிலுமில்லங்களில் நேற்றையதினம் இடம்பெற்றது .

அந்தவகையில் முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மக்கள் தமது பிள்ளைகளை உறவினர்களை நினைவில் இருத்தி துயிலுமில்லங்களுக்கு சென்று தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர் .

இந் நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் மாவீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு தமது உறவுகளை நினைத்து கண்ணீர் விட்டு க தறி அ ழுதனர்.

மக்கள் வீடுகளிலும் , வியாபார நிலையங்களிலும் , ஆலயங்களிலும் , பொது இடங்களிலும் விளக்கேற்றி மாவீரரை நினைவேந்தினர் .