முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக கனகரத்தினம் நியமனம்!

ச.கனகரத்தினம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்கஅமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்களாகவும் பலர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்டஅபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜனபெரமுன கட்சியினை சேர்ந்த கனகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு ஜனாதிபதியின் ஒப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்!