எதிர்க்கட்சித் தலைவராகிறார் சஜித் ! குவியும் வாழ்த்துக்கள்!

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.

எனினும் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் செயற்படுவார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படும் கட்சிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய , ஐ தே க தலைவர் ரணில் , பிரதித் தலைவர் சஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் முடிவினை சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து சஜீத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.