சங்கடங்களை எதிர்த்து நிற்கும் மகர ராசிக்காரர்களே… 2020 ஏழரை சனி உங்களை ஆட்டி படைக்க போகுதாம்!

image_pdfimage_print

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்களில் துலாம் ராசிக்கு எப்படி இருக்க போகுது என பார்ப்போம்.

சங்கடங்களை எதிர்த்து நிற்கும் மனதைரியம் கொண்ட மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு சனிபகவான் வரப்போகின்றார்.

உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் தனுசு ராசிக்கு குரு வந்து விட்டார். அதனால் சுப செலவுகள் ஏற்படும்.

நன்மைகளும் தீமைகளும் சமமாக நடக்கக்கூடிய ஆண்டாக இது உங்களுக்கு அமையும். ராகுகேது பெயர்ச்சி நன்மைகளை தந்தாலும், சனிப்பெயர்ச்சி சில கஷ்டங்களைத் தரும்.

இருந்தாலும் உங்கள் வீட்டிற்கு சொந்தக்காரரான சனிபகவான் உங்களுக்கான கஷ்டங்களை சிறிது குறைத்துக் கொள்வார். உங்களின் விடாமுயற்சியாலும், கடுமையான உழைப்பினாலும் வரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

குடும்பம் – குடும்ப தலைவிகளுக்கு உங்கள் குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். ஆனால் உங்களின் கணவரிடம் வாக்குவாதமும், மன சங்கடம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மனப்பக்குவமும், வார்த்தை பக்குவமும் அவசியம் தேவை. கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. உடல் நலனில் மிக அதிக கவனம் தேவை. வீண் விரையம் ஏற்படும். மே, ஜூன் ஜூலை இந்த மூன்று மாதங்களும் கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்கள் – உங்களுக்கு 5ம் இடமான ரிஷப ராசிக்கு குருபார்வை விலகிவிட்டது. படிப்பிற்கான செலவு அதிகரிக்க தொடங்கும்.

இதர விஷயங்களை தவிர்த்து விட்டு, படிப்பில் அதிக கவனம் செலுத்துவது மிக முக்கியம். ஏழாமிடத்தில் சனி பார்வை உள்ளதால் உங்கள் நட்பு வட்டாரத்தில் உடனிருப்பவர்களே உங்களுக்கு பின்னால் குழி தோண்ட வாய்ப்பு உள்ளது.

திருமணம்- ஏழாமிடத்தில் சனி பார்வை இருப்பதால் கல்யாண பேச்சை தள்ளிப்போடுவது நல்லது. ஏழரை சனியில் திருமணத்தை பற்றி பேசுவது நல்லது அல்ல.

இந்த சமயத்தில் திருமணம் நடந்தால் கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவசரம் வேண்டாம். இரண்டு வருடம் கழித்து திருமண பேச்சினை தொடரலாம். பாதிப்புகள் குறையும்.

வேலைவாய்ப்பு – பத்தாமிடத்தில் சனி பார்வை இருப்பதால் வேலை கிடைப்பதில் சங்கடங்கள் உண்டாகும். கிடைக்கும் வேலை எதுவாக இருந்தாலும் அதனை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

சொந்தத் தொழில் – உங்கள் தொழிலில் முன்னேற்றம் மந்தமாகத் தான் இருக்கும். கடன் வாங்க வேண்டாம். யாரை நம்பியும், யாருக்காகவும், தொழிலிலோ, பண பரிமாற்றத்திற்கோ ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

கோர்ட்டு, வழக்கு என்ற அளவிற்கு கூட பிரச்சனை வளர்ந்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது. விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே சங்கடங்களைத் தவிர்க்க முடியும்.

வேலைக்கு செல்பவர்கள் – உங்கள் அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவு தான் உழைத்தாலும் உங்களுக்கான நல்ல பெயர் கிடைக்காது.

எதிர்பார்ப்பு இல்லாமல் தான் உழைக்க வேண்டும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பில்லை.

உங்களை விட தகுதி குறைவாக உள்ளவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட உங்களுக்கு தாமதமாகத் தான் கிடைக்கும். இது ஏழரை சனியின் தாக்கம். அவசரம் வேண்டாம். வாக்குவாதம் வேண்டாம். வீண்பேச்சு வேண்டாம். கவனம் அதிகம் தேவை.

பரிகாரம் – குலதெய்வ வழிபாடு அவசியம். செவ்வாய்கிழமையில் முருகன் வழிபாடு செய்வது நல்லது. வெள்ளிக்கிழமையில் துர்கை வழிபாடு சங்கடங்களை தவிர்க்கும். பசுவிற்கு செவ்வாழைப்பழம் தந்து வர பிரச்சினைகள் குறையும்.