ரொரன்ரோவில் காணாமல் போன 29 வயது தமிழ்ப்பெண்! புகைப்படத்துடன் வெளியான தகவல்!

கனடாவில் தமிழ்ப்பெண் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் புகைப்படத்துடன் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கனடாவின் ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாஸ்மி ஸ்ரீஸ்கந்தராஜா என்ற 29 வயது இளம்பெண் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஸ்மி ஸ்ரீஸ்கந்தராஜா கடைசியாக கடந்த 26ஆம் திகதி இரவு 7 மணிக்கு மிட்லாண்ட் அவென்யூ மற்றும் எக்ளிண்டன் அவென்யூ கிழக்கு பகுதியில் தென்ப்பட்டுள்ளார்.

5 அடி உயரம் கொண்ட தாஸ்மி 120 இறாத்தல் எடை கொண்டவர் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கருப்பு நிற தலைமுடி மற்றும் பழுப்பு நிற கண்களை கொண்ட தாஸ்மி, காணாமல் போன அன்று என்ன உடை அணிந்திருந்தார் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

தாஸ்மி குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என தொலைபேசி எண்ணை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.