கும்ப ராசியாளர்களே! 2020 சந்தோஷங்களையும் கஷ்டங்களையும் சமமான அளவு அனுபவிக்கப் போகிறீர்களாம்!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்களில் மிதுன ராசிக்கு எப்படி இருக்க போகுது என பார்ப்போம்.

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் கும்ப ராசியாளர்களே, இந்த வருடம் உங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. இதனால் இந்த வருடம் சந்தோஷங்களையும் கஷ்டங்களையும் சமமான அளவு அனுபவிக்கப் போகிறீர்கள்.

குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம், பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு அவமரியாதை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொருட்கள் திருடு போவதற்கான வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு ஏதேனும் உடல் பிரச்னைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. நாட்கள் கடந்தால் பிரச்னை அறுவைசிகிச்சை வரை போய்விடும். இந்த வருடம் உங்களுக்கு சந்தோஷத்திற்கும் குறைவிருக்காது, சங்கடத்திற்கும் குறைவிருக்காது. கால் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு.

மாணவர்கள் – உங்கள் ராசியில் ஐந்தாம் இடத்தை குரு பார்க்கின்றார். உங்கள் படிப்பில் கவனக் குறைபாடு ஏற்படும். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்த்துவிட்டு படிப்பில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் சங்கடங்களை தவிர்க்கலாம். பெற்றோர்களின் சொற்படி நடப்பது நல்லது.

திருமணம் – உங்கள் ராசிக்கு குரு அதிசாரமாக பெயரும் சமயத்தில் குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். திருமணம் நிச்சயிக்கப்படும்.

ஆனால் சனி 12ல் இருந்து இரண்டாம் இடமான, குடும்ப வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால், நீங்கள் பேசும் வார்த்தையில் கவனம் தேவை. நீங்கள் பேசும் ஒரு தவறான வார்த்தை கூட உங்கள் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளை நடக்க விடாமல் தடுத்துவிடும்.

இனிவரும் காலங்களில் கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படக்கூடும் என்பதால் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

வேலை வாய்ப்பு – வேலை கிடைப்பதில் சில சங்கடங்கள் இருக்கும். ஆனால் கடுமையான விடாமுயற்சியினால் உங்களுக்கான வேலைவாய்ப்பு விரைவில் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

சொந்தத் தொழில் – சொந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு, உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சனியும், குருவும் இணைந்து அமரப் போகிறார்கள்.

ஆரம்பத்தில் தொழில் மந்த நிலையில் இருக்கும். உங்கள் தொழிலில் முதலீட்டை அதிக படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தாலும், அதிகமான முதலீட்டை மூன்று வருடங்களுக்கு தவிர்ப்பது நல்லது.

நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் பங்குதாரர்களிடம் கவனமாக செயல்பட வேண்டும்.

வேலைக்கு செல்பவர்கள் – நீங்கள் செய்யாத வேலைக்கு கூட உங்களுக்கு இதுவரை நல்ல பெயர் கிடைத்திருக்கும். ஆனால் இனிவரும் காலத்தில் நீங்கள் கஷ்டப்பட்டு செய்யும் வேலைக்கு கூட நல்ல பெயர் கிடைக்காது.

இந்த ஏழரை வருடத்திற்கு சில சங்கடங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும். வார்த்தையில் நிதானம் தேவை. வேலையை இறப்பதற்கு கூட நிலைமை மோசமாக வாய்ப்பு உள்ளது.

அலுவலகம் சம்பந்தப்பட்ட கோப்புகள் திருடு போகும் வாய்ப்பு உள்ளது. விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

பரிகாரம் – குலதெய்வ வழிபாடு அவசியம். சாதம், வெல்லம், தேங்காய் இவைகளை ஒன்றாக பிசைந்து பசுமாட்டிற்கு கொடுத்துவந்தால் சங்கடங்கள் குறையும். சுமங்கலிகளுக்கு செருப்பு தானம் செய்வது சிறந்த பலனை அளிக்கும்.