பார்க்காமல் காதல்: மலேசியாவிலிருந்து வந்திறங்கிய காதலி! பார்த்தவுடன் வாலிபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

image_pdfimage_print

காதல் கோட்டை படத்தில் அஜித், தேவயாணி பார்க்காமல் காதலித்து கடைசியில் ஒன்று சேர்ந்தனர். தற்போது அதிகமாக இளைஞர்கள் பார்க்காமல் காதலில் விழுந்துவிட்டு பின்பு படும் அவஸ்தை சற்று கஷ்டத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் குமார்(27) என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், முகநூல் மூலமாக அறிமுகமான மலேசியாவைச் சேர்ந்த அமுதேஸ்வரி என்ற பெண்ணிடம் நட்பாக பழகி வந்தார். பின்பு இவர்களது நட்பு காதலாக மாறியதால், தனது காதலனைச் சந்திக்க மலேசியாவிலிருந்து வந்துள்ளார்.

முகநூல் காதலி அமுதேஸ்வரியை நேரில் சந்தித்த அசோக் பய ங்கர ஷாக்காகி உள்ளார். ஆம் தான் காதலித்த முகநூல் காதலிக்கு வயது 42 என்பது சந்தித்த பின்பு தான் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அமுதேஸ்வரியை திருமணம் செய்ய இயலாத என்று கூறியதால், மனமுடைந்த அவர் மீண்டும் மலேசியாவிற்கே சென்றுள்ளார். பின்பு அமுதேஸ்வரியின் சகோதரி என்று கூறிக்கொண்டு விக்னேஸ்வரி என்பவர் அசோக்கை முகநூலில் தொடர்பு கொண்டுள்ளார்.

நீ திருமணம் செய்ய மறுத்ததால் அமுதேஸ்வரி மனமுடைந்து தற்கொ லை செய்து கொண்டார் என்றும் அவரது தற்கொ லைக்கு நீ தான் காரணம் என்றும் விக்னேஸ்வரி மிர ட்டியதாக கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரி தேனி வந்த நிலையில், அவரை அசோக் சந்தித்துள்ளார். அப்போது மீண்டும் அமுதேஷ்வரி ஏமாற்றியது தெரியவந்தது. விக்னேஸ்வரி மற்றும் அமுதேஸ்வரி ஆகிய இருவரும் ஒரே பெண் தானாம்.

குறித்த பெண் தன்னை முகநூல் மூலமாக காதலித்து ஏமாற்றியதாக தற்போது பொலிசில் புகார் அளித்ததையடுத்து, காவல்நிலைய அதிகாரிகள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்களாம்.