முல்லைத்தீவில் கனமழை ,வட்டுவாகல் பாலத்தை மேவி பாயும் வெள்ளம் , போக்குவரத்து பாதிப்பு!

image_pdfimage_print

வட்டுவாகல் பாலம்!

முல்லைத்தீவில் அண்மைய நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக வீதிகள் நீர் தேங்கி போக்குவரத்து செய்ய முடியாநிலையில் காணப்படுகின்றது .

தொடர்ச்சியான மழை காரணமாக முல்லைத்தீவிலுள்ள பல நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் நந்திக்கடலில் நீர்மட்டம் அதிகரித்து வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக நீர் வழிந்து பாய்கின்றது . இதன் காரணமாக குறித்த பாலத்தினூடான போக்குவரத்து அபாயம் மிக்கதாக மாறியுள்ளது .

இன்று அதிகாலை முதல் குறித்த பாலத்துக்கு மேலாக நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது. நீர் பாலத்துக்கு மேலாக பெருக்கெடுத்து ஓடுவதால் பல விபத்துகள் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நீர் வரத்து அதிகரித்துள்ளமையால் பாலம் முழுமையாக சில இடங்களில் மூடியுள்ளது . பல இடங்களில் பாலமும் சேதமடைந்துள்ளது . ஒவ்வொரு மழைகாலங்களிலும் குறித்த பாலம் இவ்வாறான நிலைமைக்கு செல்வதோடு ஆபத்தான முறையில் பிரயாணிகள் பயணம் செய்யவேண்டிய நிலையும் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.