முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குளங்களின் நீர்மட்டம் உயர்நிலையில்!

நன்றி – Nitharsan Kandasamy

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குளங்களினதும் நீர்மட்டம் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக திடீர் என அதிகரித்துள்ளது. அடைமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் குளங்களின் நீர்மட்டம் உயர்நிலையில் காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன் கட்டுக் குளம், தண்ணிமுறிப்பு குளம், உடையார்கட்டுக் குளம், மதவாளசிங்கன் குளம், விசுவமடுக் குளம், கணுக்கேணி குளம், மருதமடுக் குளம், தட்டாமலைக் குளம் ஆகிய குளங்களின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்தக் குளங்களின் கலிங்கு ஊடாக அதிக நீர் வெளியேறுகின்றது.

கடந்த சில தினங்களாக பெய்த மழையின் பின்னர் முல்லைத்தீவு குளங்களின் வாசிப்பு (01-12-2019) முத்தையன் கட்டுக் குளம் 16 அடி 08 அங்குலமாகவும், தண்ணிமுறிப்பு குளம் 15 அடி 10 அங்குலமாகவும், உடையார்கட்டுக் குளம் 23 அடி 08அங்குலமாகவும், மதவாளசிங்கன் குளம் 17 அடியாகவும், விசுவமடுக் குளம் 20 அடி 09 அங்குலமாகவும், கணுக்கேணி குளம் 13 அடி 01 அங்குலமாகவும், மருதமடுக் குளம் 14 அடி 02 அங்குலமாகவும், தட்டாமலைக் குளம் 14 அடி 01 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.