அகில இலங்கை ரீதியிலான தமிழ் கரோல் பாடல் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ள வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயம்!

image_pdfimage_print

அகில இலங்கை ரீதியிலான தமிழ் கரோல் பாடல் போட்டி!

கொழும்பு – றாகம புனித பேதுருவானவர் மற்றும் பவுலடியார் பேராலயத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை (01.12.2019) இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் கரோல் பாடல் போட்டியில் வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலய பங்குப்பாடகர் குழாமினர் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.

குறித்த போட்டியில் பங்குபற்றிய மாணவர்களான சனோஜன், நிதுஷன், டிலைக்சன், ஜெறோன், திலோஷன், றொக்ஷினி, சோபிகா, ஜெசிந்தா, ஜெனுஷியா, வைலட் சொப்னா ஆகியோர் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பாடல் வரிகளை அமைத்த சமிலா, பாடலுக்கு மெட்டமைத்த யுவராஜ் மற்றும் அனைத்து ஒழுங்கமைப்புக்களையும் மேற்கொண்டு ஊக்குவித்த அருட்பணி இராஜநாயகம் அடிகளார் மற்றும் அருட்சகோதரி ராஜி, பாடகர் குழுவினரை ஒழுங்கமைத்த உதயன் ஆகியோர்களுக்கு வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலய நிர்வாகம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.