இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் : மண்ணில் புதையுண்ட உயர்தர மாணவி!!

image_pdfimage_print

உயர்தர மாணவி

நுவரெலிய – வலப்பனை பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்தத்தில் கா ணாமல் போன உயர் தர மாணவியின் ச டலத்தை தேடும் நடவடிக்கை இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நேற்று பெய்த அடைமழை காரணமாக அந்த பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டமையினால் அவரை தேடும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் இந்த மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்த வீட்டில் மீது மண் மேடு சரிந்து விழுந்தது.

இதில் இன்றைய தினம் சாதாரண பரீட்சை எழுதவிருந்த அவரது சகோதரன், தாய் மற்றும் தந்தை ஆகியோர் உ யிரிழந்தனர். நேற்று காலை அவர்களது ச டலம் மீட்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த மாணவியின் ச டலத்தை மாத்திரம் இன்னமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தேடப்பட்டு வருகின்றது.