சஜித்

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ வழங்கியுள்ளார்.
நாடாளவிய ரீதியில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், கொழும்பின் புறநகர் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று சந்தித்த சஜித், அவர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கினார்.

அடைமழை காரணமாக பல நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து குடிமனைக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
