யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் விபத்து: தூக்கி வீசப்பட்ட இளைஞர்களில் ஒருவர் பலி!

விபத்து!

வவுனியா – புளியங்குளத்தில் இன்று (02-12-2019) அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரு இளைஞர்கள் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஏ9 வீதியில் வைத்து குறித்த மோட்டார்சைக்கிள் மாடொன்றுடன் மோதிய நிலையில் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் எதிரில் வந்த பேருந்துடன் மோதியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வத்தளையை சேர்ந்த 21 வயதுடைய கிருபாகரன் துஸ்யந்தன் என்பவரே பலியாகியுள்ளதுடன், அவருடன் பயணித்த ரஞ்சித் குமார் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இளைஞர்களின் மோட்டார் சைக்கிளில் மோதுண்ட மாடும் பலியாகியுள்ளது.