கனடாவில் கொ ல்லப்பட்ட இந்திய இளம்பெண் : கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மாணவர்கள்!!

இந்திய இளம்பெண்

கனடாவில் கொ ல்லப்பட்ட இந்திய இளம்பெண்ணுக்கு சர்ரேயில் உள்ள பூங்கா ஒன்றில் நடத்தப்பட்ட இரங்கல் நிகழ்ச்சியில், சர்வதேச மாணவர்களும் சட்டத்தரணிகளும் இணைந்து தங்கள் அஞ்சலியை செலுத்தினார்கள்.

இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச மாணவியான Prabhleen Matharu (21) ஒரு வீட்டில் மற்றொரு 18 வயது இளைஞருடன் இ றந்து கிடந்தார். அந்த இளைஞர், Prabhleenஐ கொ ன்றுவிட்டு, தானும் த ற்கொ லை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவித்தார்கள்.

Prabhleenக்காக சர்ரேயில் நடத்தப்பட்ட இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஏராளமான சர்வதேச மாணவர்களும் சட்டத்தரணிகளும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

One Voice Canada என்னும் சர்வதேச மாணவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்றின் இயக்குநரான Rajpreet Sohal கூறும்போது, யாரோ ஒரு தந்தையின் மகள் இ றந்துபோனாள், அவளால் தனது இலட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போனது எனக்கு கவலையை அளிக்கிறது என்றார்.

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் இந்த மாணவர்கள், தைரியமாக தங்கள் பிரச்சினைகளை பேசக்கூட மாட்டேன்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், எங்களிடம் வந்தால், அவர்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம், அரசு இருக்கிறது என்றார்.

Prabhleenஇன் உடல் அடுத்த வாரம் இந்தியாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, பஞ்சாபிலுள்ள அவரது கிராமமான Chittiயில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இதற்கிடையில் Prabhleen உடன் இ றந்து கிடந்த அந்த இளைஞரின் அடையாளங்களை வெளியிட பொலிசார் மறுத்துவிட்டார்கள். விசாரணைக்கான காரணம் எதுவும் தேவையில்லாத பட்சத்தில், அவரது அடையாளங்களை வெளியிடத் தேவை இல்லை என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

Prabhleenஇன் தந்தை கூறும்போது, அந்த இளைஞர் ஒரு வெள்ளையர் என்றும், அவரது நண்பர்கள் தனது மகளுக்கும் நண்பர்கள் என்றும் Prabhleenஇன் நண்பர்கள் தெரிவித்தது தவிர, அவரைக்குறித்து வேறொன்றும் தெரியாது என்று கூறியுள்ளார்.